NCERT : CBSE பள்ளி பாடப்புத்தகங்களில் இந்தியாவிற்கு பதில் பாரத்?

NCERT-யிடம் வைக்கப்பட்டுள்ள பரிந்துரை :

National Council Of Educational Research And Training (NCERT) எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரிக்கும் பள்ளி பாட புத்தகங்களில் இந்தியா என்ற சொல்லிற்குப் பதிலாக “பாரத்” என்ற சொல்லைப் பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அண்மையில் டெல்லியில் நடந்து முடிந்த ஜி20 மாநாட்டுக்கு நம் இந்தியா தலைமை தாங்கியிருந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுக்கு இரவு விருந்து வழங்குவதற்கான அழைப்பிதழ் குடியரசுத் தலைவர் சார்பில் அனுப்பப்பட்டது. அந்த அழைப்பிதழ்யில் வழக்கமாக “இந்திய குடியரசுத் தலைவர்” என்று இருப்பதற்கு பதிலாக “பாரத குடியரசுத் தலைவர்” (பிரெசிடென்ட் ஆஃப் பாரத்) என இடம்பெற்றிருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் விவாதத்தையே உருவாக்கியது.

இந்நிலையில் NCERT அமைப்பால் பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக ஒரு உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் களப்பணிக்கான பதக்கம் வென்ற மஞ்சுல் பார்கவா, பிரதமர் பிபேக் டெப்ராய்க்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் (PM Bibek Debroy) ஆர்.எஸ்.எஸ் – அமைப்புடன் தொடர்புடைய சமஸ்கிருத பாரதியின் நிறுவன உறுப்பினர் திரு.சாமு கிருஷ்ண சாஸ்திரி, பரோபகாரி சுதா மூர்த்தி, பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்ட 19 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்று இருக்கின்றனர். இந்த குழுவிற்கு வரலாற்று ஆய்வாளர் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த குழுவானது சில முக்கியப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்த பரிந்துரையில் இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்டது என்றும், காலனி ஆதிக்க அடையாளங்களை மாற்ற வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதால் பாடப்புத்தகங்களில் இந்தியா என்பதற்குப் பதிலாக “பாரத்” என்ற சொல்லைப் பயன்படுத்த பரிந்துரைப்பதாகவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.

பாடத்திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட இந்த உயர்மட்டக் குழுவில் உள்ள 19 உறுப்பினர்களும் ஒருமனதாக இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளனர். இக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து NCERT விரைவில் முடிவெடுக்கும் எனத் தெரிகிறது. இந்து மதம் சார்ந்த படையெடுப்பு, இந்து மதம் சார்ந்த தாக்குதல்கள் எல்லாம் எப்படி இருந்தது போன்ற விஷயங்கள் அனைத்தும் சேர்க்கப்பட வேண்டும் என்றும், காலனியாதிக்கத்தின் காரணமாக என்னென்ன முக்கிய அடையாளங்களை எல்லாம் நாடு இழந்ததோ அது எல்லாம் கல்வி முறைகளில் கொண்டுவரப்பட வேண்டும். பண்டைய கலாச்சாரங்கள் அனைத்தையும் குறித்த புரிதல்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் போன்ற பரிந்துரைகளை அந்த குழு வழங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. உயர்மட்டக்குழு கொடுக்கும் பரிந்துரைகளை NCERT ஏற்றுக்கொள்ளும் என்றே கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply