Neeraj Chopra on a silver medal in javelin : இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்

Neeraj Chopra on a silver medal in javelin :

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த July மாதம் 26 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக மற்றும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி ஆனது 08.08.2024 அன்று நள்ளிரவு நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஜெர்மனியின் ஜூலியன் வெபர், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், செக் குடியரசு வீரர் யாகூப் வட்லெஜ்ச் மற்றும் கிரனேடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளிட்ட 12 வீரர்கள் பங்கேற்றனர். இந்த  இறுதிப்போட்டியில்,

  • 97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப்பதக்கத்தை வென்று முதல் இடத்தைப் பிடித்தார். புதிய ஒலிம்பிக் சாதனையை அர்ஷத் நதீம் படைத்துள்ளார்.
  • அர்ஷத் நதீமைத் தொடர்ந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு ஈட்டியை வீசி வெள்ளிப் பதக்கத்தை வென்று 2வது இடத்தைப் பிடித்தார்.
  • கிரெனெடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 தூரத்திற்கு ஈட்டியை வீசி வெண்கலப் பதக்கத்தை வென்று 3வது இடத்தைப் பிடித்தார்.

இந்தியா இதுவரை இந்த 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. தற்போது முதல் வெள்ளிப் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு வீரருக்கும் 6 வாய்ப்புகள் ஆனது வழங்கப்பட்டது. இதில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான நீரஜ் சோப்ரா தனது இரண்டாவது முயற்சியில் 89.45 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி வெள்ளிப் பதக்கத்தை (Neeraj Chopra on a silver medal in javelin) வென்று 2வது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் தனிநபர் பிரிவில் தொடர்ச்சியாக இரண்டு பதக்கங்கள் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதைத்தவிர நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் அடுத்தடுத்து தங்கம் மற்றும் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

நீரஜ் சோப்ராவின் குடும்பத்தினர் மற்றும் இளைஞர்கள் அவரது சொந்த ஊரான ஹரியானாவில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி நீரஜ் சோப்ராவிற்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “நீரஜ் சோப்ரா மீண்டும் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி, எதிர்காலத்தில் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு ஊக்கமாக இருப்பார்” என கூறியுள்ளார். உலக சாம்பியன், காமன்வெல்த், ஆசிய போட்டிகளில் தங்கம் வென்று தங்க மகன் என பெருமைகள் பல பெற்றுள்ள போதும் அதனை கர்வமாக எடுத்துக் கொள்ளாமல், எளிய மனிதராகவே இருக்கும் நீரஜ் சோப்ராவின் நம்பிக்கை வார்த்தைகள், “வெற்றி ஆனது ஒருநாளில் வந்துவிடாது. தொடர்ந்து உழைத்தால் நிச்சயம் ஒருநாள் வரும்”.

Latest Slideshows

Leave a Reply