NEET Exam 2024 Result : தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் NEET தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர். இந்த 2024 ஆம் ஆண்டு NEET தேர்வு எழுத 24 லட்சத்து 6 ஆயிரத்து 79 பேர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பித்தவர்களில் 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 மாணவர்கள் 4,750 தேர்வு மையங்களில் எழுதி இருந்தனர். இவர்களில் 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தேர்வில் தகுதி பெற்றவர்களாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2024 ஆம் ஆண்டு 67 பேர் NEET தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்கள். கடந்த 2021-ம் ஆண்டில் நடைப்பெற்ற நீட் தேர்வில் மூன்று பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றார்கள். 2022-ம் ஆண்டில் நடைப்பெற்ற தேர்வில் யாருமே 720 மார்க் வாங்கவில்லை. கடந்த 2023-ம் ஆண்டில் நடைப்பெற்ற NEET தேர்வில் வெறும் இரண்டு பேர் மட்டுமே 720 பெற்றார்கள். இந்த  2024-ஆம் ஆண்டு மட்டும் 67 பேர் முதலிடம் பிடித்திருக்கிறார்கள்.

இந்த 2024 ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து 4 மாணவ, மாணவியர் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஜெயந்திபூர்வஜா, ரோகித், ராஜனீஷ், சபரீசன் ஆகிய 4 பேரும் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இவர்கள்  4 பேரும் நாமக்கல் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள். கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்ற தேர்வின் முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி, வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 06.06.2024 அன்று இளங்கலை மருத்துவ படிப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில் 13,16,268 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக குறைந்த கட்டணத்தில் நல்ல அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் விதத்தில் NEET தேர்வில் 600 மதிப்பெண்கள் எடுப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும். ஆனால், இந்த 2024 ஆம் ஆண்டு 660 மதிப்பெண்ணுக்குக் குறைவாக எடுத்தவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைப்பது கடினம் என்ற சூழல் ஆனது ஏற்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply