Nepal Earthquake : நேபாளத்தில் 03/11/2023 இரவு 11.47 மணியளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது
நேபாளத்தில் 03/11/2023 இரவு 11.47 மணியளவில் ஜஜர்கோட்டின் மேற்குப் பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது :
- Nepal Earthquake : Nepal’s National Seismological Centre ஆனது 03/11/2023 வெள்ளி இரவு 11.47 மணியளவில் (1802 GMT) 6.4 ரிக்டர் அளவுடன் நேபாளத்தில் ஜஜர்கோட்டின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது (மேற்கு நேபாளத்தில் உள்ள கர்னாலி மாகாணத்தின் ஒரு பகுதி இந்த ஜஜர்கோட் மாவட்டம் ஆகும்). ஒரு நிமிடத்திற்கும் மேலாக இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் (Nepal Earthquake) நீடித்தது.
- நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிற்கு மேற்கே சுமார் 500 கிமீ (300 மைல்) தொலைவில் உள்ள ஜஜர்கோட்டின் மேற்குப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது. இரவு 11.47 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது பலர் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
Nepal Earthquake - நேபாள நிலநடுக்கத்தின் தாக்கங்கள் :
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் (Nepal Earthquake) குறைந்தது 128 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்து உள்ளனர். 04/11/2023 சனிக்கிழமையன்று, அப்பகுதியில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்ததுள்ளன. இன்னும் பல வீடுகளில் விரிசல்களை உருவாக்கியுள்ளன. இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் குளிர்ந்த திறந்தவெளியில் கழித்தனர். மக்கள் விரிசல்கள் அடைந்த வீடுகளுக்குள் செல்ல மிகவும் பயப்படுகின்றனர். இந்த நேபாள நிலநடுக்கத்தின் தாக்கம் ஆனது அண்டை நாடான இந்தியாவின் தலைநகரான புது டெல்லி மற்றும் 800 கிலோமீட்டர்கள் (500 மைல்) தொலைவில் உள்ள தேசிய தலைநகர் பகுதி வரை உணரப்பட்டது. புது டெல்லியில் கட்டிடங்கள் குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஆனது பாட்னா, கதிஹார், மோதிஹாரி மற்றும் பீகாரில் உள்ள இந்திய-நேபாள எல்லையில் உள்ள பல மாவட்டங்களிலும் உணரப்பட்டது. உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட இந்தியாவில் உள்ள மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர். கடந்த 2015-ம் ஆண்டு இமயமலை நாட்டில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களுக்குப் பிறகு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் செய்தித் தொடர்பாளர் குபேர் கடயத், “ஜாஜர்கோட்டில் 92 பேரும் மற்றும் கர்னாலி மாகாணத்தில் உள்ளிருக்கும் மேற்கு மாவட்டத்தில் 36 பேரும் கொல்லப்பட்டனர்” என்று தெரிவித்தார்.
இந்தப்பகுதியில் 190,000 மக்கள்தொகை கொண்ட கிராமங்கள் ஆனது தொலைதூர மலைகளில் சிதறிக்கிடக்கின்றன. இந்த மலைப்பாங்கான பகுதியில் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்பதால் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.பல பாதிக்கப்பட்ட பகுதிகளுடனான தகவல் தொடர்பு ஆனது துண்டிக்கப்பட்டுள்ளது. ஜாஜர்கோட் மாவட்ட அதிகாரி ஹரிஷ் சந்திர சர்மா, “இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக இருக்கலாம்” என்று தெரிவித்தார். அதே நேரத்தில் ஜாஜர்கோட்டில் மட்டும் 50 பேர் மருத்துவமனைகளில் இருப்பதாக சர்மா கூறினார்.
உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் மற்றும் காயங்களின் எண்ணிக்கை ஆனது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து இன்னும் கிடைக்கவில்லை. உள்ளூர் ஊடகக் காட்சிகள் ஆனது பல அடுக்கு இடிந்த செங்கல் வீடுகளைக் காட்டியது மற்றும் மக்கள் வீதிக்கு ஓடுவதைக் காட்டியது. இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்க குடியிருப்பாளர்கள் இருட்டில் தேடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆனது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன. காவல்துறை அதிகாரி சந்தோஷ் ரோக்கா, “சேத விவரங்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்” என்று தெரிவித்தார். பிரதம மந்திரி புஷ்ப கமல் தஹால் சனிக்கிழமை அதிகாலை 16 பேர் கொண்ட இராணுவ மருத்துவக் குழுவுடன் அந்த பகுதிக்கு விமானம் மூலம் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணத்தை மேற்பார்வையிட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
Latest Slideshows
-
Vijay Tv KPY Bala : 200 குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்த குக் வித் கோமாளி பாலா
-
Chandrayaan 3 New Update : உந்து விசைகலனை வெற்றிகரமாக இஸ்ரோ பூமி சுற்றுப் பாதைக்கு திருப்பியுள்ளது
-
தமிழ்நாடு முழுவதும் 47 Automatic Testing Stations அமைக்கப்படும்
-
Hi Nanna Movie Review : 'ஹாய் நான்னா' திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
MacKenzie Scott : முதல் பணக்காரப் பெண் என்ற அந்தஸ்தை பெறப் போகும் மக்கின்சி
-
இந்திய மகளிர் அணி கேப்டன் Harmanpreet Kaur தோனியை ஓரங்கட்டினார்
-
Actor Vijay Calls VMI Volunteers : புயலால் அவதிப்படும் மக்களை மீட்க நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு
-
Wikipedia's Most Popular Articles Of 2023 : அதிகம் தேடப்பட்ட மற்றும் படிக்கப்பட்ட கட்டுரைகளை பகிர்ந்துள்ளது
-
Brian Lara : எனது சாதனைகளை இந்திய வீரர் கில் முறியடிப்பார்
-
Ravi Bishnoi : ரஷித் கானை பின்னுக்கு தள்ளி இந்திய வீரர் பிஷ்னாய் முதலிடம்