New Airport At Parandur : பரந்தூரில் புதிய விமான நிலையம் | முதல்நிலை அறிவிப்பு வெளியீடு

New Airport At Parandur :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்திற்கு (New Airport At Parandur) நில எடுப்புக்கான முதல்நிலை அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஆனது பரந்தூர் சுற்றுவட்டாரத்தின் 20 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5476 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் அதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமானநிலையம் ஆனது மிக முக்கியமான விமானநிலையங்களில் ஒன்று ஆகும். இந்த விமானநிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான உலகம் முழுவதும் சென்று வரும் பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னை மீனம்பாக்கத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் ஆனது ஏற்படுகிறது. இந்த அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சென்னை விமானநிலையத்தை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு காஞ்சிபுரம் அரக்கோணம் அருகே இருக்கும் பரந்தூர், மாண்டூர் ஆகிய இடங்களை (New Airport At Parandur) அரசு தேர்ந்தெடுத்தது.

இதில் குறிப்பாக பரந்தூர் கிராமம் ஆனது விமானநிலையம் (New Airport At Parandur) அமைப்பதற்கு ஏற்ற இடமாக இருந்ததால் அங்கு விமானநிலையங்கள் அமைப்பதற்கு அரசு முடிவெடுத்தது. பரந்தூர் மக்கள் அரசு எடுத்த இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். மேலும் பரந்தூர் கிராம மக்கள் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு முழுமையாக எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் விமான நிலையத்துக்கு நிலம் எடுப்பதற்கான உறுதியான முதல் நிலை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடாவூர் கிராமத்தில் (New Airport At Parandur) நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகி உள்ளது. நிலம் குறித்து பரந்தூர் கிராம மக்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரந்தூர் கிராம மக்கள் ஆட்சேபனைகள் குறித்து வரும்  ஏப்ரல் 4ம் தேதி விசாரணை ஆனது மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply