New Amrit Bharat Train Service : இந்திய ரயில்வே 50 புதிய அம்ரித் பாரத் ரயில்களை அறிமுகப்படுத்த உள்ளது

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் என்பது மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதுமையான வடிவமைப்பு மற்றும் குளிரூட்டப்படாத பெட்டிகள் (Non AC Boxes) பொருத்தப்பட்டுள்ள அதிவேக பயணிகள் ரயில்கள் ஆகும். இந்த ரயில் பெட்டிகளின் முன்புறமும் மற்றும் பின்புறமும் இன்ஜின்கள் இருக்கும். நவீன வசதிகள் உடன் குறைந்த டிக்கெட் கட்டணத்தில் பயணிக்க அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், அவற்றின் தொடக்கத்திலிருந்தே பரவலான பாராட்டைப் பெற்றுள்ளன. 

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்ஸின் தரமான அம்சங்கள் ( New Amrit Bharat Train Service)

Linke Hofmann Busch (LHB) புஷ்-புல் வடிவமைப்பின் முக்கிய சிறப்பம்சமாக, ரயிலின் முன் மற்றும் பின்புறம் இரண்டிலும் என்ஜின்கள் இருப்பது ஆகும். இது மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது. இந்த உள்ளமைவு முன் எஞ்சின் ரயிலை இழுக்க அனுமதிக்கும் மற்றும் பின் எஞ்சின் ரயிலை முன்னோக்கி தள்ள உதவுகிறது. இந்த புஷ்-புல் தொழில்நுட்பம் குறிப்பாக, வளைவுகள், உயரமான மலைப் பாதைகள் மற்றும் பிரிட்ஜ் போன்றவற்றில் தடையின்றி இயங்க உதவியாக இருக்கும்.

Smooth-தான இயக்கத்திற்காக இந்த ரயிலில் செமி-கூப்லர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது அலுங்கள், குலுங்கல்கள் இல்லாத ஒரு மென்மையான மற்றும் திறமையான பயணத்தை உறுதி செய்கிறது. அதாவது ரயிலுக்கே உரித்தான குலுங்கி – குலுங்கி பயணிக்கும் அந்த தன்மை இருக்காது. இந்த ரயில்களில் “கவாச்” என்ற உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆனது பொருத்தப்பட்டுள்ளது, இந்த “கவாச்” தொழில்நுட்பம் ஆனது ஆபத்தில் சிக்னல் பாஸிங் (SPAD) நிகழ்வுகளைத் தடுக்கவும், சவாலான வானிலையின் போது செயல்பாடுகளைக் கையாளவும் உதவும். முக்கியமாக என்ஜின் பைலட்டுகளுக்கு இது உதவும். மணிக்கு 130 கிமீவேகத்தில் இயங்குகிறது. ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறத்தில் எஞ்சினில் வண்ணம் பூசப்பட்டிருக்கும். 16 ஸ்லீப்பர் கோச், 4 அன்-ரிசர்வ்டு கோச், 2 கோச்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 2 கோச்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

பயணிகள் சிரமமின்றி பயணிக்க லக்கேஜ்கள் வைக்க ரேக்குகள், மடித்து வைத்துக் கொள்ளும் வசதிக் கொணட் டேபிள் ஸ்லேப், சார்ஜிங் போர்ட், தனி மின் விளக்கு, மொபைல் சார்ஜிங் வசதி, சிசிடிவி கேமிராக்கள், பொது தகவல் அமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மேலே இருக்கும் படுக்கைகளில் ஏறுவதற்கு கச்சிதமான ஏணி பொருத்தப்பட்டுள்ளது. கழிவறைகள், வாஷ் பேஷின்களில் தண்ணர் பயன்பாட்டின் அளவை குறிக்கும் வகையில் மானிட்டர்கள் இடம்பெற்றுள்ளன. கிடைமட்ட நெகிழ் ஜன்னல்கள், பெட்டிகளை இணைக்கும் அரை நிரந்தர இணைப்புகள் இந்த ரயில்களில் உள்ளன. 

கழிப்பறைகள் மற்றும் மின் பிரிவுகளில் ஏரோசல் அடிப்படையிலான தீயை அடக்கும் அமைப்புகள் உள்ளன. அவசரகால பேரிடர் மேலாண்மை விளக்குகள் உள்ளன. ஒளிரும் வழிகாட்டி கீற்றுகள் இந்த ரயில்களின் தரையில் உள்ளன. கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டின் முதல் அம்ரித் பாரத் ரயில் சேவை ஆனது இரண்டு ரயில்கள் கொண்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதில் ஒரு ரயில் பிகார் மாநிலம் தர்பங்காவில் இருந்து அயோத்தி வழியாக டெல்லியின் ஆனந்த் விகார் வரையும், மற்றும் மற்றொறு ரயில் மேற்குவங்க மாநிலம் மால்டா டவுன் வரையும் இயக்கப்படுகிறது. 

பயணிகளின் கோரிக்கைகள் :

முன்பதிவில்லாத பெட்டிகள் அதாவது ஜெனரல் பெட்டிகளை, அதிக அளவில் இணைக்க வேண்டும்.  நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இயக்க வேண்டும் வரும் 2024-25ஆம் நிதியாண்டில் 50 அம்ரித் பாரத் ரயில்களும் மற்றும் வருங்காலங்களில் ஏராளமான அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Latest Slideshows

Leave a Reply