New Bus Terminus At Kuthambakkam : குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் 2024 இறுதிக்குள் திறக்கப்பட்டும்

New Bus Terminus At Kuthambakkam - சென்னை மேற்கு மாவட்ட மக்களின் வசதிக்காக குத்தம்பாக்கம் கிராமத்தில் பேருந்து நிலையம் :

கிளாம்பாக்கத்தைத் தொடர்ந்து இந்தாண்டு இறுதிக்குள் பூவிருந்தவல்லியை அடுத்த குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்க (New Bus Terminus At Kuthambakkam) நடவடிக்கைகள் ஆனது எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆனது பெங்களூரு செல்லும் மக்கள் மற்றும் IT ஊழியர்களுக்கு உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்ட மக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது போலவே மேற்கு மாவட்ட மக்களின் வசதிக்காக குத்தம்பாக்கம் கிராமத்தில் பேருந்து முனையம் கட்டப்பட்டு (New Bus Terminus At Kuthambakkam) வருகிறது. சென்னை பெருநகரத்தின் வளர்ச்சி ஆனது  நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போலவே பேருந்து போக்குவரத்து மற்றும் வாகன போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. சென்னை அருகே உள்ள குத்தம்பாக்கம் கிராமத்தில் சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு உரை :

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு ஆனது திருமழிசை, குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் (New Bus Terminus At Kuthambakkam) அமைக்கப்படும் என அறிவித்தது. இந்த திட்டம் ஆனது மேற்கு மாவட்டங்கள், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்காக உருவாக்கப்பட்டது.   மாநில வீட்டு வசதி வாரியத்தின் திருமழிசை துணை நகர திட்டத்தில் இருந்து இதற்காக 24.8 ஏக்கர் நிலம் ஆனது பெறப்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த நிலத்தில் 336 கோடி ரூபாயில் ஐந்து லட்சம் சதுர அடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. ஒரே நேரத்தில் புறநகர் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் மாநகர பேருந்துகள் என 130 பேருந்துகளை நிறுத்தும் வசதி ஆனது குத்தம்பாக்கம் நிலையத்தில் உள்ளது.

1,680 இருசக்கர வாகனங்கள், 235 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தின் கீழ் தளத்தில் பார்க்கிங் வசதியும் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. நான்கு லிப்டுகள், நகரும்படிக்கட்டுகள் மற்றும் வைஃபை என அனைத்து வசதிகளும் பயணியர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படவுள்ளன. பொதுவாக பெங்களூரு செல்லும் IT ஊழியர்களுக்கு இந்த குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் மிகவும் பேருதவியாக இருக்கும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். இந்தாண்டு இறுதிக்குள் விரைவில் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆனது திறக்கப்படும் என்றார்.

Latest Slideshows

Leave a Reply