New Cayenne GTS மாடல் ரூ.2 கோடி விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது

கடந்த April மாதம் ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான Porsche 2024ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட கேயன் GTS மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது. தற்போது Porsche கார் தயாரிப்பு நிறுவனம் அந்த மாடல்களை தங்களது இந்திய வலைதளப் பக்கத்தில் பட்டியலிட்டு உள்ளது. Porsche கார் தயாரிப்பு நிறுவனம் ஆனது New Cayenne GTS மாடலை ரூ.2 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்ய இருக்கிறது. கேயன் கூப் மாடலானது ரூ.1.48 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், கேயன் GTS கூப் மாடலானது ரூ.2.01 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் Porsche கார் தயாரிப்பு நிறுவனம் இந்த மாடல்களை விரைவில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது Porsche கார் தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய இந்திய வலைதளப் பக்கத்தில் அந்த மாடல்களைப் பட்டியலிட்டிருக்கிறது.

New Cayenne GTS மாடல் Specifications :

  • 500hp பவர் மற்றும் 660Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, 4.0 லிட்டர் ட்வின்-டர்போ V8 பெட்ரோல் இன்ஜின் பொறுத்தப்பட்டிருக்கிறது.
  • 8-ஸ்பீடு டிப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இந்த இன்ஜினானது இணைக்கப்பட்டிருக்கிறது.
  • 4 நொடிகளில் இந்த இன்ஜினின் உதவியுடன் 0-100 கிமீ வேகத்தை இந்த GTS அடைகிறது.
  • இந்த மாடல்களில் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் உள்ளது. முன்பக்கம் 6-பிஸ்டன் கேலிப்பர் பிரேக்கும் மற்றும் பின்பக்கம் 4-பிஸ்டன் கேலிப்பர் பிரேக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
  • கருப்பு நிறத்தால் உட்புறம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
  • 14 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்டு சிஸ்டம் உள்ளது.
  • 8 வே அட்ஜஸ்டபிள் முன்பக்க சீட்கள் உள்ளது.
  • LED முகப்பு விளக்குகள், வயர்லெஸ் சார்ஜிங், ஆகிய வசதிகள் உள்ளது.
  • Park assit, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆக்டிவ் ஸ்பீடு லிமிட் அசிஸ்ட் ஆகிய வசதிகள் உள்ளது.
  • Rear Window-வுக்கு எலெக்ட்ரிக் சன்பிளைண்டு கொடுக்கப்பட்டுள்ளது.
  • பக்கவாட்டுப் பகுதிகளில் GTS என்ற ஸ்டிக்கரும் இடம்பெற்றிருக்கிறது.
  • 7 விதமான நிறங்களில் வருகிறது. Porsche கார் நிறுவனத்தின் லெஜண்டு பேக்கேஜில் இருக்கும் நிறங்கள் பெறவேண்டுமென்றால் கூடுதலாக ரூ.7.3 லட்சம் கொடுக்க வேண்டும்.

புதிய போர்ஷே கேயன் GTS Competitors :

  • Audi RS Q8
  • Lamborghini Urus S
  • Mercedes-AMG GLE 53 Coupe ஆகியவற்றுடன் இந்தியாவில் போட்டியிடவிருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply