New Coaching Staff For RCB: ஆர் சி பி அணிக்கு மீண்டும் பயிற்சியாளர் மாற்றம்...

New Coaching Staff For RCB :

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் போட்டி விளையாடும் அணிகளில் மிகவும் மோசமான அணியாக கருதப்படுகிறது. இதுவரை நடந்துள்ள அனைத்து சீசன்களிலும் ஒரு முறை கூட கப் அடிக்காத அணி ஆகும். அந்த அணி அனைத்து வருடமும் வீரர்களை மாற்றிக் கொண்டே இருக்கும். அதேபோன்று பயிற்சியாளர்களையும் அவ்வபோது மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மைக் ஹசன் நீக்கப்பட்டுள்ளார். இதற்கு பதிலாக புதிய பேச்சாளராக ஆன்ட்டி ஃபிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர் சி பி அணிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மைக் ஹசன் தலைமை பேச்சாளராக இருந்து வந்துள்ளார். இதனால் அந்த அணிக்கு பெரிதாக ஒன்றும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதன் காரணமாக அவர் தற்போது நீக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அரை இறுதி சுற்றுக்கு அழைத்துச் சென்றிருந்தார். ஆனால் கடைசி வருடம் அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால் இவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

16 வருடங்களாக ஒரு கோப்பை கூட வெல்ல முடியாதது அந்த அணி ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியுள்ளது. இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு அதிக வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பெங்களூரு அணி புதிய பயிற்சியாளரை நேற்று அறிவித்துள்ளது. ஜிம்பாப்வே அணி வீரர் ஆன்ட்டி ஃபிளவர் அவர்களை பயிற்சியாளராக அறிவித்துள்ளது. முன்னதாக லக்னோ அணி ஜஸ்டிங் லாங்கர் என்பவரை ஒப்பந்தம் செய்தது. இதனால் அதிகமான டி20 லீக் தொடரை வென்று கொடுத்துள்ள ஆன்ட்டி ஃபிளவர் என்பவரை பெங்களூர் அணி ஒப்பந்தம் செய்திருக்கிறது. இவரை ஒப்பந்தம் செய்வதற்கு ராஜஸ்தான் ஐதராபாத் போன்ற பல்வேறு அணிகள் முயற்சி செய்து வந்தன. இந்த நிலையில் அவரை எந்த அணி எடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் அவர் பெங்களூர் அணியில் அடுத்த மூன்று ஆண்டு காலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிட்டுள்ளது.

பயிற்சியாளர் மாற்றம்:

இவர் அண்மையில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலியா அணியின் ஆலோசகராக செயல்பட்டார். இதேபோன்று இங்கிலாந்து அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்ற போது அந்த அணி பயிற்சியாளராக இருந்தார். இதனால் தங்களுடைய கோப்பையை வெல்லும் கனவு அடுத்த வருடம் ஆவது நிறைவேறுமா என்று ஆர்சிபி ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply