New Facility Of EC : சொத்து பத்திரம் பதிவு செய்யப்பட்ட அன்றே வில்லங்க சான்று பெறும் புதிய வசதி அறிமுகம்

சொத்து பத்திரம் பதிவு செய்யப்பட்ட அன்றே வில்லங்க சான்றிதழ் (EC) பெறும் புதிய வசதி ஆனது தமிழ்நாட்டில் (New Facility Of EC) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஆனது பொதுமக்களுக்கு பத்திர பதிவு சேவைகளை எளிதாக வழங்கவும், பத்திர பதிவுத்துறையின் தொழில்நுட்ப மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாட்டில் தற்போது 582 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இவை தினந்தோறும் சராசரியாக பல ஆயிரம் பொதுமக்களுக்கு பத்திரபதிவு சேவையை வழங்கி வருகின்றன.

தமிழ்நாட்டில் தற்போது ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் ஆனது சார்-பதிவாளர் அலுவலகங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பொதுமக்களுக்கு இதைப் பயன்படுத்தி பத்திர பதிவு நாளிலேயே பத்திரத்தை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

பொதுவாக பதிவு பணிகள் விரைவாக முடித்தாலும், சொத்து பரிமாற்றம் குறித்த விவரங்களை பதிவுத் துறையின் தகவல் தொகுப்பில் Entry செய்ய ஓரிரு நாட்கள் தேவைப்படும். அதனால் சில நாட்கள் கழித்து தான் பொது மக்கள், அந்த குறிப்பிட்ட சொத்து பரிமாற்றம் குறித்த வில்லங்க சான்றிதழை பெற முடியும். ஆனால் தற்போது, பதிவு முடிந்த நாளிலேயே, பொது மக்கள் வில்லங்க சான்றிதழை மொபைல் போன் வாயிலாக பெறும் புதிய நடைமுறையை பதிவுத் துறை ஆனது அறிமுகப்படுத்தி உள்ளது.

New Facility Of EC - Platform Tamil

பத்திரம் பதிவு செய்யப்பட்ட அன்றே வில்லங்க சான்றை பெறலாம் (New Facility Of EC)

தற்போது ஸ்டார் 2.0 என்ற மென்பொருளை பயன்படுத்தி பத்திரம் பதிவு செய்யும் போது அதற்கான தகவல்கள் எல்லாம் உடனே தரவுத்தொகுப்பில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதன்பின், அந்த பத்திரம் பதிவு செய்துள்ள நபரின் குறிப்பிடப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு SMS மூலம் இணையதள லிங்க் அனுப்பப்படுகிறது. இந்த லிங்க் கிளிக் செய்தால் அந்த சொத்துக்கு சமீபத்தில் செய்த பரிமாற்றம் பற்றிய வில்லங்க சான்றிதழை (New Facility Of EC) இலவசமாகப் பெற முடியும். இந்த வில்லங்க சான்றிதழின் இணைப்பு ஆனது 30 நாட்கள் வரை செல்லுபடியாக இருக்கும். பொதுமக்கள் இந்த வில்லங்க சான்றிதழின் இணைப்பை சொத்து வரி, மின்சாரம் மற்றும் நீர் இணைப்பு பெயர் மாற்றங்களைச் செய்ய பயன்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறு புதிய பதிவுத் துறை நடைமுறையை குறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறினர்.

Latest Slideshows

Leave a Reply