New Features On Instagram : மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது

மெட்டாவின் மூலம் இன்ஸ்டாகிராமில் புதிய சிறப்பு அம்சங்கள் (New Features On Instagram) வெளியாகியுள்ளன. அவற்றை தற்போது காணலாம்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் ஒரு பிரபலமான வீடியோ பகிர்வு தளமாக மாறியுள்ளது. பலரும் ரீல்களைப் பார்க்க விரும்புகிறார்கள். மெட்டா நிறுவனமானது இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய மூன்று சமூக வலைத்தளங்களிலும் ஒரே மாதிரியான தொழில்நுட்ப வசதிகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் ஒருவரை மென்ஷன் செய்வது போல மெட்டா வாட்ஸ் அப்பிலும் பயன்படுத்தப்படும் (New Features On Instagram) அம்சத்தை கொண்டு வந்துள்ளது. மெட்டா நிறுவனமும் இன்ஸ்டாகிராமின் பல்வேறு அம்சங்களை வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியது.

ஸ்டிக்கர் அம்சம்

Instagram-ன் ஸ்டிக்கர் அம்சமான Meta புதிய ஸ்டிக்கர் DM அம்சத்தின் மூலம் 17 புதிய ஸ்டிக்கர்களையும் 300-க்கும் மேற்பட்ட ஸ்டிக்கர்களையும் (New Features On Instagram) பகிர்ந்து கொள்ள உதவுகிறது. மேலும் உங்கள் வார்த்தைகள் போதுமானதாக இல்லை என்றால் சேட்  லிஸ்டில் பிடித்த ஸ்டிக்கரை வைத்து உங்கள் நண்பர்களுடன் அந்த ஸ்டிக்கரை மீண்டும் பயன்படுத்தலாம்.

நிகழ்நேர இருப்பிடத்தை தெரிவிக்க

வாட்ஸ்அப் செயல்பாட்டில் ஒருவர் இருக்கும் இடத்தை ‘லைவ் லொக்கேஷன்’ செய்யும் வசதி உள்ளது. இதை இப்போது இன்ஸ்டாகிராமிலும் பயன்படுத்தலாம். ஆனால் இதை அமைப்புகளில் மாற்றினால் மட்டுமே நேரலை இருப்பிடத்தைப் பகிர முடியும். இந்த வசதி வாட்ஸ் அப்பில் இருப்பது போல் இல்லை. இன்ஸ்டாகிராமில் உள்ள லைவ் லிங்க் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தானாகவே காலாவதியாகிவிடும்.

நிக்நேம் அம்சம் (New Features On Instagram)

மெட்டாவானது இன்ஸ்டாகிராம் செய்திகளில் புதிய ஸ்டிக்கர், புனைப்பெயர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு ‘நிக்நேம்’ அமைக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது Facebook Messenger-ல் உள்ளது. இது செய்தி அரட்டை விண்டோவில் மட்டுமே தெரியும். இது வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராமிலும் (New Features On Instagram) அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் எழுதாமல் ஸ்டிக்கர்கள் மூலம் தொடர்புகொள்ளும் நோக்கத்துடன் இது அறிமுகப்படுத்தப்பட்டதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply