New Force Gurkha Introduced : New 3 Doors மற்றும் 5 Doors Force Gurkha அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது

New Force Gurkha Introduced :

இந்தியாவின் முன்னணி வேன் உற்பத்தி நிறுவனமான Force Motors ஆனது 2024ம் ஆண்டுக்கான Update செய்யப்பட்ட மாடலாக, 3 Doors மற்றும் 5 Doors என இரண்டு வேரியன்ட்களாக புதிய Gurkha-வை May, 2024 முதல் வாரத்தில் (New Force Gurkha Introduced) அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தற்போது ரூ.25,000 செலுத்தி இந்த கூர்க்க மாடல்களை முன்பதிவு செய்யலாம். மாடல்களின் விலை முறையே ரூ.16.75 லட்சம் மற்றும் ரூ.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

சிறந்த பாதுகாப்பு மற்றும் அனைத்து நோக்கம் கொண்ட SUV ஐ விரும்புவோருக்கு பல மேம்பட்ட அம்சங்களுடன் சமீபத்திய மாடல்கள் :

  • SUV இப்போது 4 – seaters (3-doors) மற்றும் 7 – seaters (5-doors) விருப்பங்களில் வருகிறது.
  • கூர்காவின் இரண்டு பதிப்புகளும் ஒரே 2.6-லிட்டர் மெர்சிடிஸ்-ஆதார டீசல் எஞ்சினைக் கொண்டுள்ளது.
  • 6 Litre Turbocharged intercooled Diesel engine, 140PS power மற்றும் 320Nm Torque-கை வெளிப்படுத்துகிறது.
  • எலெக்ட்ரானிக்கலாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய வகையிலான ORVM-கள், Start-Stop வசதி, LED முகப்பு விளக்குகள் உள்ளன.
  • பாதுகாப்பிற்காக Dual Airbags, ABS மற்றும் EBD ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முன்பக்க விபத்துக்கு இணக்கமான இவற்றைக் கொண்டுள்ளன.
  • 18-inch Dual – Tone Alloy Wheels.
  • புதுப்பிக்கப்பட்ட Dashboard-ல் 7 inch digital instrument cluster-வுடன் புதிய 9 இன்ச் Touchscreen Display இடம்பெறுகிறது.
  • Apple CarPlay மற்றும் Android Auto உட்பட அனைத்து வயர்லெஸ் கார் இணைப்புத் தொழில்நுட்பங்கள் உள்ளன.
  • பல USB போர்ட்கள், தனிப்பட்ட Armrests மற்றும் புதிய Cup holders உள்ளன.
  • Infoinment system பொருத்தப்பட்டுள்ளது.
  • 233mm Ground clearance-வுடன், 700mmv வரை வாட்டர் வேடிங் திறனைக் கொண்டிருக்கிறது.
  • Console மற்றும் Bluetooth இணைப்பு கொண்டுள்ளது
  • எலெக்ட்ரானிக் Shift-on-the-fly தொழில்நுட்பமானது 4 வீல் டிரைவ் பயன்பாட்டை இன்னும் எளிதாக்குகிறது. இது ஓட்டுநர் நிலைமைகளைப் பொறுத்து 2L, 4H மற்றும் 4L முறைகளுக்கு இடையில் தடையின்றி மாற அனுமதிக்கிறது. சாலைப் பாதைகளில் எந்தச் சூழலையும் கையாளத் தேவையான பல்துறைத்திறனை கூர்க்கா வழங்குகிறது.
  • புதிய கூர்க்காவில் நாம் பயணிக்கும் பாதைக்கு ஏற்ப 2L, 4H மற்றும் 4L என மோடுகளை எளிதாக மாற்றிக் கொள்ள முடியும்.

Force மோட்டார்ஸின் நிர்வாக இயக்குநர் பிரசன் ஃபிரோடியா உரை :

Force மோட்டார்ஸின் நிர்வாக இயக்குநர் பிரசன் ஃபிரோடியா, “2024 ஃபோர்ஸ் கூர்க்கா ஒரு தனித்துவமான வாகனமாகும். புதிய அப்டேட் செய்யப்பட்ட கூர்க்கா 3 டோர் மாடலை ரூ.16.75 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், புதிய கூர்க்கா 5 டோர் மாடலை ரூ.18 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கிறது. புதிய கூர்க்கா இந்தியாவின் பல்வேறு புவியியல் நிலப்பரப்புகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பனி மூடிய சிகரங்கள் முதல் பாலைவனங்கள், கண்ணுக்கினிய கடற்கரைகள், வெப்பமண்டல மழைக்காடுகள், வனவிலங்கு சரணாலயங்கள் பயணங்களுக்கும் மற்றும் தினசரி பயணங்களுக்கும் ஏற்றதாக உள்ளது” என்று கூறினார். வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள ஷோரூமிற்குச் சென்று அல்லது நிறுவனத்தின் இணையதளம் மூலமாக ரூ.25,000 டோக்கன் செலுத்தி முன்பதிவு செய்யலாம். மே மாதத்தின் மத்தியில் டெலிவரிகள் தொடங்கும். Gurkha மஹிந்திரா தாறுடன் போட்டியிடுகிறது. இந்திய சந்தையில் Gurkha-வின் ஒரே போட்டியாளர் மஹிந்திரா தார் ஆகும்.

Latest Slideshows

Leave a Reply