New Jersey Akshardham Temple : உலகின் 2 வது பெரிய இந்து கோவில் திறக்கப்பட உள்ளது

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி உலகின் 2 வது பெரிய இந்து கோவில் ஆனது (New Jersey Akshardham Temple) திறக்கப்பட உள்ளது. நியூ ஜெர்சியில் உள்ள Robbinsville Township-ப்பில் நியூயார்க்கில் உள்ள  Times Square-த்தில் இருந்து தெற்கே 90 கிமீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது. BAPS சுவாமிநாராயண் அக்ஷர்தாம் அமைப்பு ஆனது சன்ஸ்தா, இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, கென்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு இடங்களில் சுமார் 1,400 கோயில்களைக் கட்டியுள்ளது.

BAPS சுவாமிநாராயண் அக்ஷர்தாம் அமைப்பால் கட்டப்பட்ட இந்த அக்ஷர்தாம் கோவில் (New Jersey Akshardham Temple) ஆனது அக்டோபர் 8 ஆம் தேதி முறையாக திறக்கப்பட உள்ளது. இது  உலகின் இரண்டாவது பெரிய இந்து ஆலயம் ஆகும். கம்போடியாவில் உள்ள 12ஆம் நூற்றாண்டு அங்கோர்வாட் கோயில் உலகின் முதல் பெரிய இந்து ஆலயம் ஆகும். இது 500 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தற்போது இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக உள்ளது. இந்த அற்புதமான பிரமாண்டமான கோவில் ஆனது 19 ஆம் நூற்றாண்டை சார்ந்த இந்து மத ஆன்மீகத் தலைவரான பகவான் சுவாமிநாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது அவருடைய 5 வது ஆன்மீக வாரிசான மதிப்பிற்குரிய துறவி பிரமுக் சுவாமி மகாராஜின் உத்வேகத்தால் ஈர்க்கப்பட்டு கட்டப்பட்டது.

New Jersey Akshardham Temple - அக்ஷர்தாம் கோயிலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை :

  • 2011 முதல் 2023 வரை (12 ஆண்டுகளில்) இந்த கோவில் ஆனது அமெரிக்கா முழுவதிலும் இருந்து 12,500 தன்னார்வலர்களால் (New Jersey Akshardham Temple) கட்டப்பட்டுள்ளது.
  • இந்த ஆலயம் ஆனது பண்டைய இந்து வேதங்களின்படி 183 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்து கிடக்கிற பூமியில் பண்டைய இந்திய கலாச்சாரத்தின் வடிவமைப்பு கூறுகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் ஆனது  255 அடி x 345 அடி x 191 அடி மற்றும் 183 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
  • இதில் 10,000 சிலைகள் மற்றும் இந்திய இசைக்கருவிகளின் செதுக்கல்கள் மற்றும் நடன வடிவங்களின் செதுக்கல்கள் அடங்கும். இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த மதிப்பிற்குரிய முனிவர்கள், துறவிகள் மற்றும் ஆன்மீக பிரமுகர்களுக்கு அவை மரியாதை செலுத்துகின்றன.
  • கடுமையான வெப்பத்தையும் குளிரையும் தாங்கும் சுண்ணாம்பு, இளஞ்சிவப்பு மணற்கல், பளிங்கு மற்றும் கிரானைட் உள்ளிட்ட நான்கு வகையான கற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த மதக் கட்டிடம் ஒரு நுட்பமான கட்டுமான செயல்முறைக்கு உட்பட்டது.
  • பல்கேரியா மற்றும் துருக்கியில் இருந்து சுண்ணாம்புக்கல் உட்பட உலகெங்கிலும் உள்ள பல்வேறு தளங்களில் இருந்து பெறப்பட்டது. பளிங்கு கல் ஆனது கிரீஸ், துருக்கி மற்றும் இத்தாலியில் இருந்து பெறப்பட்டது. கிரானைட் கல் ஆனது இந்தியா மற்றும் சீனாவில் இருந்து பெறப்பட்டது. மணற்கல் இந்தியாவில் இருந்து பெறப்பட்டது. ஐரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்காவிலிருந்து பிற அலங்கார கற்கள் ஆனது பெறப்பட்டது. இந்த கோவில் கட்டுமானத்தில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் கன அடி கல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • கல் துண்டுகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு அங்குள்ள இந்தியாவைச் சேர்ந்த தன்னார்வ கைவினைஞர்களின் வழிகாட்டுதலின் கீழ் பல்வேறு தன்னார்வத் தொண்டர்களின் கூட்டம் கோவிலில் வேலை செய்வதற்காக ஒன்றிணைந்து செயல்பட்டது. சிக்கலான கைவினைத்திறனுக்கு உட்படுத்தப்பட்டது.
  • பிரம்ம குண்ட் ஆனது இந்தியாவின் புனித நதிகள் மற்றும் அமெரிக்காவின் 50 மாநிலங்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள 300 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் இருந்து நீரைக் கொண்டு ஒரு பாரம்பரிய இந்திய படிக்கட்டுக் கிணறாக அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த கோவில் வடிவமைப்பில் 12 துணை கோவில்கள், ஒன்பது கோபுரம் போன்ற கட்டமைப்புகள் மற்றும் ஒன்பது பிரமிடு ஷிகர்கள் உள்ள ஒரு தனித்துவமான முக்கிய கோவில் ஆகும்.
  • வட அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் உள்ள 12,500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கூட்டாக ஒரு ஆயிரமாண்டுக்கும் மேலாகத் தாங்கும் வகையில் ஒரு இணையற்ற அடையாளத்தை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த ஆலயம் 1000 ஆண்டுகள் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அக்ஷர்தாம் கோயில்கள் அவற்றின் அற்புதமான கட்டிடக்கலை மற்றும் பிரமாண்டமான வடிவமைப்புகளுக்கு பெயர் பெற்ற கோவில்கள் ஆகும்.
  • அதன் முறையான திறப்பு விழாவிற்கு முன்னதாக, கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் மற்றும் பிற மதத்தினர் வருகை தருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply