New M4 Apple Mac Model Updates : New M4 Apple Mac மாடல்கள் வெளியீடு

Apple நிறுவனம் முக்கிய அப்டேட் வெளியிட்டு உள்ளது (New M4 Apple Mac Model Updates)

Apple நிறுவனம் Oct 28/10/2024 (திங்கள்கிழமை) தொடங்கி அடுத்த வாரம் முழுவதும் வரிசையாக புதிய Apple மேக் மாடல்கள் குறித்த அப்டேட்களையும் (New M4 Apple Mac Model Updates) மற்றும் புதிய Apple மேக் மாடல்களையும் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் பதிவு ஒன்றை X  தளத்தில் வெளியிட்டு உள்ளது. Apple நிறுவனம் புதிதாக M4 சிப்பைக் கொண்ட  14 இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் M4 மேக்ஸ் சிப்களைக் கொண்ட 14 இன்ச் மேக்புக் ப்ரோ M4 ப்ரோ மற்றும் M4 மேக்ஸ் சிப்களைக் கொண்ட 16 இன்ச் மேக்புக் ப்ரோ ஆகிய மாடல்களையும், மேலும்  M4 மற்றும் M4 ப்ரோ சிப்களைக் கொண்ட Mac Mini வேரியன்ட்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட Apple மாடல்களின் உற்பத்தி ஆனது விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற 2025-ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் இந்த மேம்படுத்தப்பட்ட Apple மாடல்கள் (New M4 Apple Mac Model Updates) வெளியிடப்படும். Apple நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ, ஐமேக், மேக் மினி, மேக் ஸ்டூடியோ மற்றும் மேக் ப்ரோ என பல்வேறு வடிவங்களில், பல்வேறு வசதிகளுக்கு ஏற்ற வகையில் விற்பனை செய்து வரும் அனைத்து மாடல்களிலும் M3 சிப்களே பயன்பாட்டில் இருக்கின்றன.

தற்போது வருகின்ற அடுத்த வார அப்டேட்டில், மேக்புக் ப்ரோ, ஐமேக் மற்றும் மேக் மினி ஆகிய மூன்று மாடல்களை மட்டுமே Apple நிறுவனம் அப்டேட் செய்ய இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வரும் 2025-ஆம் ஆண்டின் நடுவில் மேக்புக் ஏர் மாடலையும், 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் மேக் ஸ்டூடியோ மற்றும் மேக் ப்ரோ மாடல்களையும் M4 சிப்களைக் கொண்டு Apple நிறுவனம் அப்டேட் செய்யும் (New M4 Apple Mac Model Updates) என எதிர்பார்க்கப்படுகிறது.

M4 சிப் கொண்ட புதிய மேக்புக் ப்ரோ (New M4 Apple Mac Model Updates)

இது 16 ஜிபி ரேமுடன் தொடங்கும். இந்த புதிய மாடல் 16ஜிபி ரேம் மற்றும் இரண்டு கூடுதல் CPU கோர்களுடன் வரக்கூடும். இந்த மாடலில் மூன்று தண்டர்போல்ட் 4 போர்ட்கள் மற்றும் 10-கோர் CPU மற்றும் 10-கோர் GPU ஆகியவை இருக்கும்.

Latest Slideshows

Leave a Reply