New Notification Of NHAI : சென்னை GST சாலையில் மாற்றம் | NHAI-ன் புதிய அறிவிப்பு

New Notification Of NHAI :

NHAI (National Highways Authority Of India) ஆனது சென்னை GST சாலையில் 7 இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும் (New Notification Of NHAI) என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் 33 கிமீ நீளம் கொண்ட இந்த GST சாலை ஆனது நல்ல மாற்றமும் மற்றும் ஏற்றமும் பெறும். GST சாலையின் பிரச்சனைகள் அடியோடு நீங்கும். சமீப காலத்தில் GST-ன் 8 வழிச்சாலையில் சராசரி வாகன வேகத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பானது ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த முடிவு ஆனது எடுக்கப்பட்டுள்ளது. சராசரி வாகன வேகத்தின் அதிகரிப்பால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

அரசு அதிகாரபூர்வ தரவுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் GST-ன் சாலை விபத்துகளில் 60 பாதசாரிகள் இறக்கிறார்கள். அடுத்து வரும் ஆறு மாதங்களில் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே Lift பொருத்தப்பட்ட புதிய பாதசாரிகளுக்கான நடைமேடை மேம்பாலங்களை (FOBs – Free On Boards) அமைக்க NHAI ஆனது (New Notification Of NHAI) திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பாதசாரிகளின் பாதுகாப்பானது மேம்படுத்தப்படும். இந்த திட்டத்திற்கு மொத்தமாக ₹16.3 கோடி செலவாகும் (New Notification Of NHAI) என NHAI மதிப்பிட்டுள்ளது. இந்த புதிய பாதசாரிகளுக்கான மேம்பாலங்களுக்கான இடங்களாக,

  • வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
  • எஸ்டான்சியா டெக் பார்க்
  • சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையம்

ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய பாதசாரிகளுக்கான நடைமேடை மேம்பாலங்களை (FOBs – Free On Boards) அமைக்க NHAI ஆனது திட்டமிட்டுள்ளது. இந்த இடங்கள் அனைத்தும் அதிக பாதசாரி போக்குவரத்தை கொண்டு இருப்பதால் முதல் கட்டமாக இந்த பகுதிகளில் இந்த FOBs நடைமேடை பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த FOB-க்கள் ஒரே நேரத்தில் 16 பேர் வரை தாங்கக்கூடிய லிஃப்ட்களைக் கொண்டிருக்கும்.

இந்த FOB-க்கள் குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பயணிப்பதை எளிமையாக்கும். இந்த FOB-க்கள் மூலம் தினமும் 40,000க்கும் மேற்பட்ட பாதசாரிகள் பயனடைவர் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு NHAI ஆனது பொத்தேரியில் உள்ள SRM கல்லூரிக்கு அருகிலும் மறைமலைநகரிலும் இரண்டு நடை பாலங்களை அமைத்து உள்ளது. இந்த நடை பாலங்கள் கணிசமான விபத்து எண்ணிக்கை குறைப்புக்கு வழிவகுத்து உள்ளது. இதே GST-ன், சென்னை அண்ணா சாலையில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் ஆனது தொடங்கப்பட்டுள்ளதால் அண்ணா சாலையில் Barricade ஆனது போடப்பட உள்ளது. இதனால் அண்ணா சாலையில் இந்த திட்டப் பணிகள் முடியும் வரை வருகின்ற நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக நிலவும் வாய்ப்புகள் உள்ளன.

சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை 3.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழி சாலையாக உயர் மட்ட சாலை (New Notification Of NHAI) அமைக்கப்பட உள்ளது. பொறியியல் அதிசயம் என்று சொல்லும் விதமாக, கீழே உள்ள மெட்ரோ சுரங்கத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத விதத்தில் உயர்மட்ட சாலை ஆனது அமைக்கப்படும். இந்த மேம்பாலத்திற்கான அடித்தளம் ஆனது சாலை மட்டத்திலிருந்து ஏழு மீட்டர் ஆழத்தில் அமைக்கப்படும். மேலும் இவை சராசரியாக 20m-28m ஆழம் கொண்ட மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேலே அமைக்கப்படும். இந்த 3.2 கிமீ நான்கு வழி உயர்மட்ட சாலை பணிகள் முடித்தவுடன் பயணிகள் 10 நிமிடங்களுக்குள் தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே பயணிக்க முடியும். இந்தியாவிலேயே முதல்முறையாக, நிலத்தடி மெட்ரோ சுரங்க பாதை கொண்ட சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

Latest Slideshows

Leave a Reply