New Planet Discovered By James Web : இரவுப்பகல் நேரம் மாற்றமில்லாத WASP-39 b கோள் கண்டுபிடிப்பு

நமது சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள் வியாழன் ஆகும். வியாழன் கோள் உட்பட நமது சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளையும் தனித்தனியாக ஆராய விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அது மிகவும் சவாலான காரியமாகவே இருக்கிறது. காரணம் ஒவ்வொரு கோளும் பூமியிலிருந்து பல மில்லியன் தூரம் தொலைவில் உள்ளதால் அங்கு விண்கலத்தை செலுத்தி ஆராய்ச்சி செய்வது என்பது மிக கடினமானதாக இருக்கிறது. இருப்பினும் விஞ்ஞானிகள் அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்கா போன்ற சில நாடுகள் தொலைநோக்கியின் உதவியுடன் சூரிய குடும்பத்தை தாண்டி வேறு கிரகத்தில் ஏதாவது உயிரினங்கள் இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகளுடன் இணைந்து நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி முக்கிய பங்காற்றி வருகிறது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தனது கண்களால் பல மில்லியன் தொலைவில் உள்ள கிரகங்களை கண்காணித்து அவற்றின் தோற்றம், செயல்பாடுகள் ஆகியவற்றை நமக்கு தெரிவித்துக்கொண்டு இருக்கிறது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி :

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் உதவியுடன் கருந்துளை தோற்றம் பற்றியும், விண்மீன் வெடிப்பு பற்றியும் தெரிந்துக்கொண்டு அதைப்பற்றி விஞ்ஞானிகள் பல்வேறு விதமான ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

WASP-39 b கோள் :

இந்நிலையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இரவு, பகல் நேரம் மாற்றமில்லாத WASP-39 b என்ற புதிய கோளை (New Planet Discovered By James Web) கண்டுபிடித்துள்ளது. WASP-39 b கோள் என்பது G வகை நட்சத்திரத்தை சுற்றி வரும் வாயுக்கள் நிறைந்த ஒரு கோள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோளானது பூமியில் இருந்து சராசரியாக 700 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நமது வியாழன் கிரகத்தை விட சுமார் 1.3 மடங்கு பெரியதாகும். 

New Planet Discovered By James Web - இரவுப்பகல் நேரம் மாற்றமில்லை :

இந்த WASP-39 b கோளின் ஒருபக்கம் பகலாகவும், மறுபக்கம் இரவாகவும் எப்பொழுதும் காணப்படுகிறது. இதற்கு காரணம் அந்த கோள் சூரியனை மட்டுமே சுற்றுகிறது. ஆனால் தன்னைதானே சுற்றிக்கொள்வதில்லை. நம் பூமியை பொறுத்தவரை பூமி தன்னையும் சுற்றும், சூரியனையும் சுற்றும். அதனால்தான் நமக்கு இரவு, பகல் வரும். ஆனால் இந்த WASP-39 b கோள் அப்படியல்ல. சூரியனை மட்டுமே சுற்றுகிறது. இதன் காரணமாக இரவு பகல் மாறுவதே இல்லை. WASP-39 b கோளில் காலை மற்றும் மாலை இடையேயான வெப்பநிலை வேறுபாடு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மாலையில் சுமார் 300 ஃபாரன்ஹீட் டிகிரி (சுமார் 150 செல்சியஸ் டிகிரி) வெப்பமாக உள்ளது. வெவ்வேறு மேக மூட்டத்திற்கான ஆதாரங்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதன்படி அந்த கிரகத்தில்  காலை பகுதி மாலையை விட எப்போதும் மேகமூட்டமாக இருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Latest Slideshows

Leave a Reply