New Procedure For Apartment Deed : அடுக்குமாடி திட்ட வீடுகள் விற்பனைக்கு புதிய நடைமுறை

New Procedure For Apartment Deed - அடுக்குமாடி திட்ட வீடுகள் விற்பனைக்கு தமிழக அரசு பதிவுத்துறை ஆனது புதிய நடைமுறை அறிவித்துள்ளது :

தமிழக அரசு 23.11.2023 அன்று புதிய குடியிருப்புகள் பதிவுக்கான முத்திரைத் தீர்வையை (New Procedure For Apartment Deed) குறைக்க முடிவெடுத்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

UDS முறைகேட்டுக்கு பத்திரப்பதிவு துறையின் அதிரடி முற்றுப்புள்ளி :

அடுக்குமாடி திட்ட வீடுகள் விற்பனையில் UDS முறைகேட்டுக்கு பத்திரப்பதிவு துறையானது புதிய நடைமுறை மூலம் அதிரடி முற்றுப்புள்ளி (New Procedure For Apartment Deed) வைத்துள்ளது. இந்த பதிவுத்துறை அறிவித்திருக்கும் புதிய நடைமுறைக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகின்றன. அதேநேரத்தில் அரசுக்கு  இந்த புதிய நடைமுறை தொடர்பான சில கோரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பதிவுத்துறை அறிவிப்பின்படி,

  • இந்த அறிவிப்பினால், ரூ.50 லட்சம் வரை மதிப்புள்ள குடியிருப்பு வாங்குவோர் முத்திரைத் தீர்வு 4% மற்றும் பதிவுக் கட்டணம் 2% என 6% செலுத்தினால் போதுமானது.
  • அதுபோலவே, ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான மதிப்புள்ள குடியிருப்புகளை வாங்குவோர் 5% முத்திரைத் தீர்வு 4% மற்றும் 2% பதிவுக்கட்டணம் என 7% செலுத்தினால் போதுமானது.

இந்த சலுகை ஆனது பிரிக்கப்படாத பாக மனையுடன் பதியப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டும் பொருந்தும். மேலும், இந்த சலுகை ஆனது  குடியிருப்புகளின் முதல் விற்பனைக்கு மட்டுமே பொருந்தும். அதாவது இந்த சலுகை ஆனது கட்டுமான நிறுவனத்திடமிருந்து தனி நபருக்கு முதல் முறையாக விற்கப்படும் வீடுகளுக்கு மட்டுமே  வழங்கப்பட்டுள்ளது. மறு விற்பனைக்கு இந்த சலுகை ஆனது பொருந்தாது. வருகின்ற 1ம் தேதி முதல் இந்த சலுகை ஆனது அமலுக்கு வருகிறது என்று (New Procedure For Apartment Deed) அறிவித்துள்ளது. 

இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு அவர்கள் கருத்து :

இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு இந்த அறிவிப்பினை வரவேற்றுள்ளார்.  இதுகுறித்து எஸ்.ராமபிரபு அவர்கள்  கூறியதாவது, வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் ஒரு குடியிருப்பின் மதிப்பு ஆனது ரூ.50 லட்சம் என்றால், முந்தைய முத்திரைத்தீர்வை அடிப்படையில் பதிவுக் கட்டணமான 9%-யின்படி ரூ.4.5 லட்சம் செலுத்த வேண்டும். தற்போதுள்ள புதிய நடைமுறையின்படி 6%-மாக குறைவதால் கட்டணம் ஆனது ரூ.3 லட்சமாக குறையும்.

இதனால் பொதுமக்களுக்கு உள்ள செலவு ஆனது குறையும். அதேநேரத்தில் வீடுகள் விற்பனையும் நல்ல விகிதத்தில் அதிகரிக்கும். அரசின் வருவாயும் இதன் மூலம் உயரும். இந்த சலுகை ஆனது கட்டுமான நிறுவனத்திடமிருந்து முதல் முறையாக தனி நபருக்கு விற்கப்படும் வீடுகளுக்கு மட்டுமே  வழங்கப்பட்டுள்ளது. தனி நபரிடம் இருந்து அதே வீடு ஆனது இன்னொரு நபருக்கு விற்கப்படும் போது, கட்டிடத்தின் மதிப்பு குறையும் நிலையில், AS பதிவு கட்டண வகையில் 9% தொகையை முத்திரைத்தீர்வாக செலுத்தும் நிலை ஏற்படும். இந்த செயல் முறையானது அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு முழுமையாக அமல்படுத்தப்படும்.

UDS Shares வைத்து குடியிருப்பு திட்டங்களில் முறைகேடுகளில் ஈடுபடமுடியாது :

UDS Shares வைத்து குடியிருப்பு திட்டங்களில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனங்கள் தங்கள் பெயரில் வீடு இன்றி நிலத்தின் பிரிக்கப்படாத பங்கில் ஒரு பகுதியை வைத்திருப்பதை இந்த புதிய நடைமுறை ஆனது அனுமதிக்காது. வீடு இல்லாமல் UDS Shares வைத்து குடியிருப்பு திட்டங்களில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த நடைமுறை திட்டம் அமைந்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று ஆகும்.

இந்த நடைமுறை (New Procedure For Apartment Deed) ஆனது பொது மக்களின் கருத்துகளை முறையாகவும் மற்றும் முழுமையாகவும் கேட்காமல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்கள்,  “நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படும் என்றுள்ள தற்போதைய நிலையில், இந்த புதிய நடைமுறையால், மக்களுக்கு கூடுதல் செலவு ஆனது ஏற்படும்” என்று அதிருப்தியுடன் தெரிவித்து வருகின்றன.

டாக்டர் ஆ.ஹென்றி அரசுக்கு விடுத்துள்ள புதிய கோரிக்கை :

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி ஒரு முக்கியமான புதிய கோரிக்கை ஒன்றை அரசுக்கு விடுத்துள்ளார். அதில், டாக்டர் ஆ.ஹென்றி 3 கோடிக்கு மேல் மதிப்புள்ள பிரிபடாத பாகம் (Undivided Share) உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு என்ன முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்கிற தெளிவுரையை அரசு ஆனது  வழங்கிட வேண்டும். மேலும் Real Estate துறையின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் பொது அதிகார ஆவணத்திற்கு (General Power Attorney) பதிவு கட்டணம் குறைந்தபட்சம் 1%-கிதமும், அதிகபட்சமாக ரூபாய் 50 ஆயிரமும் அறிவித்து  அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும் என்றும் டாக்டர் ஆ.ஹென்றி கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Latest Slideshows

Leave a Reply