New Rule For Air Passengers : விமானப் பயணிகளின் சிரமத்தை போக்க புதிய விதிமுறை

New Rule For Air Passengers :

விமானங்கள் மக்களுக்கு விரைவான மற்றும் சொகுசான பயணத்தை  தருகிறது. இருந்தபோதும் சில நேரங்களில் ஒரு விமானத்தில் பயணிகள் எல்லாம் ஏற்றப்பட்ட பின்பு ஏதாவது பிரச்சனை ஏற்படுகிறது. அதாவது விமானங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில் விமானத்தின் பாதுகாப்பு குறித்த சிக்கல்கள் ஏற்படுகிறது மற்றும் அடுத்த விமானிக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இது போன்ற  பல்வேறு காரணங்களால் விமானப் புறப்பாடு ஆனது தாமதம் ஆகிறது  மற்றும் விமானம் காலதாமதமாக பயணம் செய்கின்றன.

இதனால் பயணிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் எப்போவதுதான் நடக்கிறது என்றபோதும், இதனால் பயணிகள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். இப்படிப்பட்ட நேரங்களில் விமானத்தில் ஏற்றப்பட்ட பயணிகள் எவ்வளவு நேரம் தாமதம் ஆனாலும் அவ்வளவு நேரமும் விமானத்தின் உள்ளே ஏறிய பயணிகள் விமானத்துக்கு உள்ளேயே அமர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. விமானப் பயணிகளை மீண்டும் வெளியே அனுப்ப விதிமுறைகள் இதுவரை இல்லாமல் இருந்தது.

தற்போது புதிய நடைமுறை (New Rule For Air Passengers) ஒன்று விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் அமலுக்கு வந்துள்ளது. புதிய நடைமுறை ஆனது விமானம் புறப்பட தாமதம் ஏற்பட்டால் இனி பயணிகள் நீண்ட நேரம் விமானத்தில் உள்ளேயே காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், விமானப் பயணிகளை தாராளமாக புறப்பாடு கேட் வழியாகவே வெளியே அனுப்பலாம் எனவும் தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கண்காணிப்பதற்காக உள்ள  அமைப்புதான் விமான பயணிகள் படும் இந்த சிரமத்தை கண்காணித்து இதற்கான புதிய நடைமுறையை (New Rule For Air Passengers) வகுத்துள்ளது. விமானப் பயணிகள் ரொம்ப நாளா இப்படி ஒரு ரூல்ஸ் வரவேண்டும் என்று காத்திருந்தனர்.  இப்போது வந்துள்ள இந்த நடைமுறை மூலம் விமானப் பயணிகள் தாராளமாக வந்த வழியாகவே வெளியே சென்று விமான நிலையத்தில் காத்திருக்கலாம்.

மீண்டும் அவர்களுக்கு போர்டிங் நடக்கும். பொதுவாக விமானத்தில் போர்டிங் என்பது மிகப்பெரிய பணி ஆகும். விமான நிறுவன ஊழியர்கள் ஒவ்வொரு பயணியையும் சரியாக கண்காணித்து அவரை போர்டு செய்து விமானத்திற்குள் சரியாக அவரது இருக்கையில் அமர வைக்க வேண்டும். இப்போது விமான நிறுவன ஊழியர்களுக்கு விமானம் காலதாமதம் ஆனால் விமானப் பயணிகளை மீண்டும் டிபோர்டு செய்து மறுபடியும் போர்டு செய்ய வேண்டும்.  விமான நிறுவன ஊழியர்களுக்கு இது இரட்டை வேலையாக அமையும்.

Latest Slideshows

Leave a Reply