New Rules Introduced In FASTag : August 1, 2024 முதல் FASTag-ல் அறிமுகமாகி உள்ள புதிய விதிகள்

கடந்த 2019 ஆம் ஆண்டில் மத்திய அரசு டோல் கட்டணம் செலுத்த மற்றும் டோல் கேட்டுகளில் நெரிசலைக் குறைக்கும் விதமாக இந்த FASTag முறையை (மின்னணு கட்டண வசூல் முறையை) அறிமுகப்படுத்தியது. NPCI (National Payments Corporation Of India) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில் FASTag-கின் புதிய விதிகள் ஆனது Aug 1, 2024 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு (New Rules Introduced In FASTag) வந்துள்ளது. இந்த புதிய விதிகள் குறித்து விளக்கமாக தெரிந்து கொள்வது அவசியமாகும்.

New Rules Introduced In FASTag - NPCI வெளியிட்டுள்ள FASTag-க்கிற்கான புதிய விதிகள் :

  • சகல வாகன ஓட்டிகளும் FASTag-க்கிற்கான KYC-ஐ கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 1, 2024 ஆம் தேதி முதல் இந்த செயல்முறை ஆரம்பமாகியுள்ளது.
  • அக்டோபர் 31, 2024 ஆம் தேதி ஆனது KYC புதுப்பிப்புக்கான கடைசி நாள் ஆகும் .
  • அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் KYC அப்டேட் ஆனது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. KYC அப்டேட் குறித்த விதிமுறைகளை பின்பற்ற  வேண்டியது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சகல வாகன உரிமையாளர்களும் மற்றும் வாகன ஓட்டிகளும் வாகனம் வாங்கிய 90 நாட்களுக்குள் பதிவு எண் புதுப்பிக்கப்பட வேண்டியது முக்கியம் ஆகும். இந்த செயல்முறையை சகல வாகன ஓட்டிகளும் மற்றும் FASTag வழங்குநர்களும் பின்பற்ற வேண்டும்.
  • Fastag உடன் வாகன பதிவு எண் மற்றும் சேஸ் எண் என்பவற்றை இணைக்க வேண்டும்.
  • NPCI வழிகாட்டுதல்களின்படி, அக்டோபர் 31 ஆம் தேதிக்கு முன்னர் FASTag வழங்கும் நிறுவனங்கள் ஆனது மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட அனைத்து FASTagகளுக்கும் KYC-ஐ புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் ஆகஸ்ட் 1 முதல் FASTag சேவை வழங்குநர்கள் முறையாக பின்பற்ற வேண்டியது (New Rules Introduced In FASTag) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply