New Startup Hubs In Tier 2 And Tier 3 Cities : டயர் 2, 3 சிட்டிகளில் புதிய ஸ்டார்ட்-அப் ஹப்கள்

New Startup Hubs In Tier 2 And Tier 3 Cities - டயர் 2, டயர் 3 நகரங்களுக்கு அதிக முக்கியத்துவம் :

தமிழக அரசு ஆனது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய ஸ்டார்ட்-அப் ஹப்களை கொண்டு வரும் வகையில் புதிய திட்டம் (New Startup Hubs In Tier 2 And Tier 3 Cities) ஒன்றை தீட்டியுள்ளது. குறிப்பாக டயர் 2, டயர் 3 நகரங்களுக்கு தமிழக அரசு ஆனது அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக அரசு ஆனது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக தமிழக அரசு ஆனது ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. சமீபத்தில் தமிழக அரசு ஆனது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி 6.64 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் ஈர்த்து 26.90 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கி உள்ளது. இதேபோல் தமிழ்நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கும் (MSME) தமிழக அரசு ஆனது அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

தமிழ் நாட்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது :

  • தமிழ்நாட்டில் ஸ்டார்ட்-அப் இன்குபேட்டர்ஸ் சம்மிட் (Tamil Nadu Startup Incubators Summit) நிகழ்வு ஆனது சமீபத்தில் நடைபெற்றது. அதில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு ஆனது ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தாயகமாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் 50%-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை பெண்கள் தான் தொடங்கி நடத்தி வருகின்றனர். இது பெரிதளவில் ஊக்கப்படுத்தப்பட்டு வரவேற்க வேண்டிய விஷயம் ஆகும். 
  • ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட “StartupTN Catalyst” என்ற பிரத்யேக இணையதளத்தில் 120-க்கும் மேற்பட்ட இன்குபேட்டர்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் StartupTN Smart Cards என்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டு ஆடிட்டிங், பிராண்டிங், மார்க்கெட்டிங், டாகுமெண்டேஷன் உள்ளிட்ட சேவைகள் செய்து தரப்படுகின்றன.
  • StartupTN’s Women Initiative கீழ் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் 14.7 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 15 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  • தமிழக அரசு ஆனது புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கி வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறது. இதையொட்டி டயர் 2, டயர் 3 நகரங்களில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் (New Startup Hubs In Tier 2 And Tier 3 Cities) ஹப்கள் கொண்டு வரப்பட உள்ளன. கடலூர், ஓசூர், சேலம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. நடப்பு 2024-25ஆம் நிதியாண்டில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • ஈரோடு, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் ஸ்டார்ட்-அப் ஹப்கள் அமைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply