New Terms to Buy SIM Card : ஜூலை 1ம் தேதி முதல் SIM Card வாங்க புதிய விதிமுறைகள்

புதிய சிம் கார்டு விதிகளின் படி, இந்திய குடிமக்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் SIM Card தொடர்பான (New Terms to Buy SIM Card) விதிகளில் புதிய மாற்றம் அமலுக்கு வரவிருக்கிறது. இந்தியாவில் பட்ஜெட் போன், பிளாக்ஷிப் போன், மற்றும் பிரீமியம் ஸ்மார்ட் போன் என எத்தனை விதமான போன்கள் வெளிவந்தாலும், இவற்றை பயன்படுத்த ஒரு சிறிய சிம் கார்ட் தான் தேவையாகிறது. தகவல் தொலைத் தொடர்பு துறை அமைச்சகம் சிம் கார்ட் விற்பனைக்கு புதிய விதிமுறையை விதித்துள்ளது.

சிம் கார்டுகளை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. மேலும் சிம் கார்ட் விற்பனை செய்யும் கடைகள் மொத்தமாக சிம்கார்டுகளை வாங்கும் நிறுவனங்களுடன் உரிய ஒப்பந்தத்தை போட்டு அதற்கான காரணம், மற்றும் விளக்கங்களை கேட்டு முறையாக பதிவு செய்ய வேண்டும். தற்போது தொலைபேசி வழியாக பொருளாதார மோசடிகள், மற்றும் பல்வேறு வகையான குற்றங்கள் பெருமளவில் நடக்கிறது.

சிம்கார்டுகளை குற்றங்களில் ஈடுபடும் தவறான நபர்கள் கையில் செல்வதை தடுக்கும் வகையிலும், மற்றும் குற்றங்கள் நடக்கும் பட்சத்தில் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஏதுவாகவும் இருக்கும் வகையில் சிம் கார்டு வழங்கும் நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் ஆனது செய்யப்பட்டிருக்கின்றன. இந்திய அரசாங்கம் இணைய மோசடியை சமாளிக்க தயாராகி வருகின்ற சூழலில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

புதிய சிம் கார்டை வாங்க பின்பற்றவேண்டிய புதிய விதிகள் : New Terms to Buy SIM Card

  • இனிமேல் சிம்கார்டு வாங்கும் பயனாளர்கள் KYC எனும் முழு விவர படிவத்தை பூர்த்தி செய்து கையொப்பமிட வேண்டும். இதன் மூலம் யார் வேண்டுமானாலும், யாருடைய பெயரிலும் சிம் கார்டைப் பெற்று அதைப் பயன்படுத்திக் கொள்வது தடுக்கப்படும். 
  • e-KYC மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே வாடிக்கையாளர்கள் பிசிக்கல் டாக்யுமேன்ட்களை (Physical Documents) வழங்க வேண்டியதில்லை. Physical Document verification இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் சிம் கார்டு வழங்கும் செயல்முறை மிக வேகமாகவும், மற்றும் எளிதாகவும் இருக்கும். மேலும் டெலிகாம் நிறுவனங்கள் வெரிபிகேசனுக்காக செலவிட வேண்டிய செலவுகள் குறையும். 
  • ஒரு நபர் தனது அடையாள அட்டைகளை பயன்படுத்தி 9 சிம் கார்டுகள் வரை மட்டுமே வாங்க முடியும். இந்த 9 சிம் கார்டுகள் 90 நாட்கள் பயன்பாட்டிற்கு பிறகு மற்ற நபருக்கு அளிக்கப்படும். 
  • முகவர், மற்றும் விநியோகஸ்தர் விவரங்களை தொலைதொடர்பு நிறுவனங்கள் உரிய முறையில் பதிவு செய்து தெளிவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிம் கார்டு விற்பனை செய்ய பயன்படுத்த வேண்டும். 
  • விற்பனை செய்யும் முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தாங்கள் விற்பனை செய்யும் சிம் கார்டுகளின் விவரங்களை தொடர்ச்சியாக கண்காணித்து வர வேண்டும். இந்த விதியை சிம் கார்டு நிறுவனம் மீறினால் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

Latest Slideshows

Leave a Reply