New Virus Discovered By China : மூன்றே நாளில் மரணத்தை ஏற்படுத்தும் புதிய வைரஸ்

New Virus Discovered By China - சீன விஞ்ஞானிகள் மூன்றே நாளில் மரணத்தை ஏற்படுத்தும் புதிய வைரஸைக் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பல கோடி உயிர்களை கொரோனா வைரஸ் பலி வாங்கியது. மேலும் பொருளாதார ரீதியாகவும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா வைரஸை கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனா கண்டுபிடித்தது. இந்த நிலையில், தற்போது சீனா மீண்டுமொரு வைரஸை (New Virus Discovered By China) உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய வைரஸ் ஆனது மூன்றே நாட்களில் உயிரைக் கொல்லும் கொடிய சக்தி வாய்ந்த வைரஸ் ஆகும். எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி சீனாவின் ஹெபெய் மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த புதிய வைரஸை (New Virus Discovered By China) உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மரபணு மாற்றப்பட்ட புதிய வைரஸ் ஆனது மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும் என கூறப்படுகிறது. சீன விஞ்ஞானிகள் எபோலா வைரஸில் உள்ள கிளைகோபுரோட்டீனை இந்த வைரஸில் பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கிளைகோபுரோட்டீன் ஆனது செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும் விரைந்து பரவக்கூடியது எனவும் மற்றும் எபோலா பாதித்தவர்களிடம் காணப்படுவதைப் போன்ற உறுப்பு செயலிழப்பு ஆனது ஏற்படும் எனவும் சீன விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

சில வெள்ளெலிகளுக்கு இந்த வைரஸ் செலுத்தப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட சில வெள்ளெலிகளின் கண் இமைகளின் மேற்பரப்பில் புண்கள் ஏற்பட்டன (சில வெள்ளெலிகள் தங்கள் கண்களில் சுரப்புகளை வெளிப்படுத்தியது). அவற்றின் கண்பார்வையை இறுதியில் இந்த வைரஸ் செயலிழக்கச் செய்துள்ளது. மேலும், அந்த எலிகளின் பல உறுப்புகளில் செயலிழப்புகள் ஏற்பட்டு இறுதியில் மூன்று நாட்களில் அவை இறந்துள்ளன. இது எபோலா வைரஸ் நோயின் மற்றொரு அறிகுறி என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. சீன விஞ்ஞானிகள் இந்த வைரஸ் வெளியே பரவாமல் இருக்க தடுப்பு உத்திகளை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளனர். உலகம் முழுவதும் இந்த புதிய வைரஸ் (New Virus Discovered By China) அச்சுறுத்தலாக அமையலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply