New Website For Property Case Details : வீடு, மனை சொத்துக்களின் வழக்கு விவரம் அறிய புதிய இணையதளம் அறிமுகம்

நிலம், வீடு, மனை வாங்குபவர்களின் வசதிக்காக வருவாய் துறை புதிய இணையதள வசதியை (New Website For Property Case Details) அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருவர் புதிதாக ஒரு சொத்தை வாங்கும்போது அதன் முந்தைய உரிமையாளர் யார் என்ற விவரத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் வில்லங்க சான்றிதழாகும். இந்த வில்லங்க சான்றிதழ் மூலமாக சம்மந்தப்பட்ட சொத்து இதற்கு முன் யாரிடம் இருந்தது? எத்தனை உரிமையாளர்கள் சொத்தை அனுபவித்தார்கள் போன்றவை பதிவாகியிருக்கும்.

சொத்து வழக்குகள் :

ஆனால் இந்த வில்லங்க சான்றிதழ்களில் சொத்து தொடர்பான நீதிமன்ற தடை உத்தரவுகள், சொத்தின் வழக்கு விவரங்கள் போன்றவை தெளிவாக தெரியாது. இதனால் வழக்குகள் நிலுவையில் இருப்பது எதுவும் தெரியாமல் சொத்தை மக்கள் வாங்குகின்றனர். வாங்கிய பிறகு சொத்து பத்திரப்பதிவுக்கு வரும்போதுதான் வழக்குகள் விவரம் பற்றி தெரிகிறது. இந்த சிக்கலை தீர்ப்பதற்காக வருவாய் துறை அதிரடி நடவடிக்கை (New Website For Property Case Details) எடுத்து வருகிறது.         

New Website For Property Case Details :

இதற்காக வருவாய் துறை பட்டா மாறுதல், அ பதிவேடு, நில அளவை வரைபடம் போன்ற அனைத்து விவரங்களையும் ஆன்லைன் மூலம் மக்கள் பெறவேண்டும் என்பதற்காக இ-சேவை இணையதளத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நிலங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வகையான வழக்கு விவரங்களையும் ஒரே இணையத்தளத்தில் பெறும் வகையில் www.clip.tn.gov.in/ என்ற இணையதளம் (New Website For Property Case Details) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பட்டா மாறுதல் தொடர்பான மேல்முறையீடு வழக்குகள், வருவாய் துறை நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகள், உரிமையியல் நீதிமன்ற வழக்குகள் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். சொத்துக்கள் வாங்குபவர் அது தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்கு விவரங்களையும் மக்கள் எளிதாக அறிவதற்கு வருவாய் துறை புதிய இணையதள வசதி அறிமுகப்படுத்தி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply