New Website Introduced To Agricultural Land Details : விவசாய நில அடங்கல் விவரங்களை ஆன்லைனில் பார்ப்பதற்கு புதிய இணையதளம்

தமிழக அரசின் வருவாய்த்துறை மற்றும் பத்திரப்பதிவு துறையானது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பட்டா மற்றும் சிட்டா உள்ளிட்ட விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்ய மாற்றப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் பட்டா விவரங்களை ஆன்லைனில் பார்ப்பது போலவே விவசாய நிலத்தின் அடங்கல் விவரங்களையும் ஆன்லைனிலேயே பார்ப்பதற்கு (New Website Introduced To Agricultural Land Details) தேவையான ஏற்பாடுகளை வருவாய்த்துறை அறிமுகம் செய்துள்ளது.        

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பத்திரப்பதிவு துறை நிலம் தொடர்பான அனைத்து விவரங்களையும் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் (Digital India) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகள் (New Website Introduced To Agricultural Land Details) டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாய நிலம் (Agricultural Land) தொடர்பான அனைத்து வகை ஆவணங்களையும் மத்திய அரசு உதவியுடன் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது ஜாதி சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ் போன்றவற்றை ஆன்லைனிலேயே பெற்றுக்கொள்ளலாம்.     

கடந்த பல ஆண்டுகளாக பத்திரப்பதிவு நடைமுறைகளுக்கு பொதுமக்கள் நீண்ட காலம் அலைய வேண்டியிருந்த நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிஜிட்டல் நடைமுறையால் விரைவாக தீர்வு கிடைக்கிறது. மேலும் முதற்கட்டமாக பட்டாக்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு டிஜிட்டல் வடிவிலேயே வழங்கப்படுகிறது. மேலும் நில அளவை வரைபடங்களும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.      

அந்த வகையில் விவசாய நிலங்களின் உரிமை, சாகுபடி விவரங்கள் மற்றும் பிற ஆவணங்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு இதற்கு தேவையான (New Website Introduced To Agricultural Land Details) நடைமுறைகள் துவக்கப்பட்ட நிலையில் விவசாயிகளுக்காக பிரத்யேக செயலி (App) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த செயலியில் விவசாயிகள் தங்கள் நிலத்தின் அடங்கல் விவரங்களை அவர்களே அப்டேட் செய்து கொள்ளலாம். இதில் மேலும் ஒரு புதிய அம்சமாக டிஜிட்டல் முறையில் அப்டேட் செய்யப்படும் அனைத்து விவரங்களையும்  பொதுமக்களே பார்த்து கொள்ளலாம்.

புதிய இணையதளம் அறிமுகம் (New Website Introduced To Agricultural Land Details)

விவசாய நில அடங்கல் விவரங்களை (New Website Introduced To Agricultural Land Details) ஆன்லைனில் பார்ப்பதற்காக www.clip.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாய நிலத்தை வாங்க விரும்புபவர்களும், விற்க விரும்புபவர்களும் இந்த அடங்கல் ஆவணங்களை பார்ப்பதற்கு  வருவாய்த்துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலும் நிலங்களுக்கு கடன் வழங்கும் வங்கி அதிகாரிகளும் இந்த இணையதளத்தின் மூலம் விரைவான சேவையை மக்களுக்கு வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply