New York Grand Central Terminal Railway Station: உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையம்...

New York Grand Central Terminal Railway Station :

உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள Grand Central Terminal  ரயில் நிலையம் ஆகும்.

இந்த  Grand Central Terminal ரயில் நிலையத்தின் பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தின் சில சிறப்பு அம்சங்கள் :

இந்த  Grand Central Terminal  ரயில் நிலையம் 1903 முதல் 1913 காலக்கட்டத்தில் கட்டப்பட்டது.

சுமார் 48 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த Grand Central Terminal  ரயில் நிலையம்  கட்டப்பட்டுள்ளது. 

இந்த நியூயார்க் Grand Central Terminal ரயில் நிலையத்தில் மொத்தம் 44 நடைமேடைகள் உள்ளன. மொத்தம் 44 ரயில்கள் ஒரே நேரத்தில் இந்த  Grand Central Terminal  ரயில் நிலையத்தில் நிற்க முடியும்.

இரண்டு அண்டர் கிரவுண்ட்  நிலைகள் இந்த ரயில் நிலையத்தில் உள்ளன.

இந்த ரயில் நிலையத்தில் ஒரு  ரகசிய நடைமேடை தளம் கட்டப்பட்டுள்ளது ஒரு  சிறப்பு ஆகும். இந்த ரகசிய நடைமேடை தளம் ஆனது வால்டோர்ஃப் அஸ்டோரியா ஹோட்டலுக்கு கீழே கட்டப்பட்டுள்ளது.

தினமும் சராசரியாக 660 மெட்ரோ ரயில்கள் இந்த ரயில் நிலையத்தின் வழியாக செல்கின்றன.

ஒரு லட்சத்து 25,000 பயணிகள் இந்த Grand Central Terminal ரயில் நிலையம் வழியாக பயணிக்கின்றனர்.

இரண்டாம் உலகப் போரின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் பொதுமக்களையும் ஊடகத்தையும் எதிர்கொள்வதைத் தவிர்க்க சக்கர நாற்காலியின் உதவியுடன் நேரடியாக டிராக் 61 நடைமேடைக்கு வந்து தனது பயணத்தை மேற்கொள்வாராம்.

அந்த டிராக் 61 நடைமேடை இப்போது பயன்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கர்நாடகா மாநிலம் ஹுப்ளி ரயில் நிலையத்தில் உலகின் மிக நீளமான நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக நீளமான நடைமேடை என்ற பட்டத்தை இந்திய ஹுப்ளி ரயில் நிலையம் பெற்றுள்ளது. இந்த ஹுப்ளி ரயில் நிலைய நடைமேடையின் நீளம்  1,507 மீட்டர். (i.e. கிட்டத்தட்ட ஒன்றை கிலோமீட்டர் நீளம்)

பிரதமர் மோடி  ஹுப்ளி ரயில் நிலைய நடைமேடையை அண்மையில் திறந்து வைத்தார்

இந்திய நாட்டின் மிகப்பெரிய ரயில் நிலையம் ஹவுரா சந்திப்பு  ரயில் நிலையம் ஆகும்.  ஹவுரா சந்திப்பு  ரயில் நிலையத்தில் 26 நடைமேடைகள் உள்ளன.

Latest Slideshows

Leave a Reply