New Zealand Vs Afghanistan : ஆப்கானிஸ்தான் அணியை ஊதி தள்ளியது நியூசிலாந்து

New Zealand Vs Afghanistan : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 16வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி வலுவாக உள்ள சூழலில், சேசிங் தேர்வு அந்த அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.

New Zealand Vs Afghanistan :

ஆனால் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் ஆப்கானிஸ்தானின் மோசமான பீல்டிங்கால் (New Zealand Vs Afghanistan) நியூசிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. கேப்டன் லாதம் 68 ரன்களும், பிலிப்ஸ் 71 ரன்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்ததாக 289 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது. ஆனால் 6வது ஓவரிலேயே அதிரடி வீரர் குர்பாஸ் 11 ரன்களிலும், ஜத்ரன் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த கேப்டன் ஷாஹிதி 8 ரன்களில் ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் அணி 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து வந்த ரஹ்மத் ஷா – ஒமர்சாய் சிறிது நேரம் சண்டையிட்டனர்.

ஆனால் ஒமர்சாய் 27 ரன்களிலும், ரஹ்மத் ஷா 62 பந்துகளில் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் நபி 7 ரன்களிலும், ரஷித் கான் 8 ரன்களிலும், முஜீப் உர் ரஹ்மான் 4 ரன்களிலும், கடைசியாக வந்த நவீன் உல் ஹக், ஃபரூக்கி ஆகியோர் டக் அவுட்டாகினர்.

இதனால், ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவரில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் சான்ட்னர், பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. (New Zealand Vs Afghanistan) ஆப்கானிஸ்தான் அணியின் இந்த தோல்விக்கு அந்த அணி சேசிங் தேர்வு செய்து பீல்டிங்கில் கேட்ச்களை விட்டதே காரணம் என்று பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply