News18 Interview With Revathi : NEWS 18 உடனான சமீபத்திய உரையாடலின் இனிய பகிர்வுகள்

News18 Interview With Revathi :

நடிகை ரேவதி மூன்று முறை தேசிய விருது பெற்ற நடிகை ஆவார். மேலும் ஒரு நடிகை என்பதைத் தவிர இயக்குனராகவும் ரேவதி பொறுப்பேற்றுள்ளார். நடிகை ரேவதி NEWS 18 உடனான சமீபத்திய (News18 Interview With Revathi) உரையாடலில், 90’s-களில் சல்மான் கானுடனான தனது கடந்த கால தோழமை மற்றும் தனது திரைப்பட பயணம் பற்றி ரேவதி நினைவு கூர்ந்தார். ரேவதி மற்றும் சல்மான் இருவரும் 1991-ஆம் வருடம் முதல் இணைந்து நடித்துள்ளனர். தற்போது ‘டைகர் 3’ படத்திற்காக ரேவதியும் சல்மான் கானும் மீண்டும் இணைந்துள்ளார்கள்.

நடிகர் சல்மான் கானுடன் நடிகை ரேவதியின் திரைப்பட பயணம் :

1991-ஆம் வருடம் ரேவதியின் கணவர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய Love என்ற காதல் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இந்தப் படம் 1989-ல் வெளிவந்த பிரேமா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் ரீமேக் படம் ஆகும்.  மேலும் இந்தப் படம் ரேவதிக்கு பாலிவுட்டில் ஓர் அறிமுகம் தந்த படம் ஆகும். இந்த Love திரைப்படத்தில் நடித்தனின் மூலம் ரேவதியும் சல்மான் கானும் 90களில் பாலிவுட்டில் ஓர் மிகவும் விரும்பப்பட்ட ஜோடிகளில் ஒன்றாக இருந்தனர். ஒரு சில படங்களுக்கு மட்டுமே இருவரும் திரை இடத்தைப் பகிர்ந்து கொண்ட போதிலும், அவர்களின் வேதியியல் மற்றும் தோழமையால்  பரவலாக ரசிகர்களின் இதயங்களை வென்றனர்.

2004-ல் ரேவதி இயக்கிய Phir Milenge, படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளார்கள். அபிஷேக் பச்சன் மற்றும் ஷில்பா ஷெட்டி ஆகியோரும் இந்தப் படபடத்தில் நடித்துள்ளனர். டைகர் 3 படத்தில் தற்போது மீண்டும் இருவரும் நடித்து வருகின்றனர். மனீஷ் ஷர்மா இயக்கும் டைகர் 3 படத்தில் கத்ரீனா கைஃப் மற்றும் இம்ரான் ஹாஷ்மி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.  இந்த டைகர் 3 திரைப்படம் ஆனது இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் நவம்பர் 12 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த டைகர் 3 படத்தின் ட்ரெய்லர் ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டது.

நடிகர் சல்மான் கானுடன் தனது நட்பினைப் பற்றி நேர்காணலில் ரேவதி பேசியுள்ளார் :

இருவரும் ‘ Love’ படத்தில் நடித்ததில் இருந்து நீண்ட நாட்களாக ‘Phir Milenge’ படத்தில் நடித்தது வரை நல்ல நண்பர்கள் ஆவர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் (News18 Interview With Revathi), நடிகை ரேவதி, நடிகர் சல்மான்கானுடனான தனது உறவு மற்றும் அவருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றிப் பேசுகையில், “நான் சல்மானை எப்போது அழைத்தாலும் அல்லது சந்திக்க விரும்பினாலும் அதை என்னால் செய்ய  முடியும். சல்மான் என் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்.  அதே போல் எனக்கும் அவர் மீது அன்பும் அக்கறையும் உண்டு. மேலும் சல்மானை பாராட்டி, அவர் கொடுக்கும் குணம் உடையவர்” என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவருடைய ஒரு நல்ல படத்தை நான் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குப் பிடித்திருந்து நான் மெசேஜ் செய்யும் பொழுது அவரும் எனக்குப் பதில் மெசேஜ் அனுப்புவார். சில சமயங்களில் மூன்று நான்கு வருடங்கள் கழித்தும் கூட அவர் நடித்த ஒரு படத்தைப் பற்றி அவருக்கு மெசேஜ் செய்து கூறியிருக்கிறேன். நடிகை ரேவதி தன்னை ஒரு சாதாரண மனிதர் என்றும், தற்போது சல்மான் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் என்றும் கூறியுள்ளார். சல்மான் திரைப்பட உலகில் ஒரு புதிய நபராக இருந்து ஒரு பரபரப்பான சூப்பர் ஸ்டாராக எப்படி மாறினார் என்பதையும் கூறியுள்ளார்.

நடிகை ரேவதியின் திரைப்பட பயணம் :

News18 Interview With Revathi : தான் நடிக்க போகும் தனது திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்த குறிப்பிட்ட உத்தியையும் பின்பற்றுவதை இலக்காகக் கொண்டதில்லை என்று ரேவதி குறிப்பிட்டுள்ளார். தான் நடிக்க எடுக்கும் கடின உழைப்பைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு வழக்கமான கதாபாத்திரத்தையும் மீண்டும் மீண்டும் செய்ய விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். என்னைப் பொறுத்த வரையில், இந்த ரேவதி ஆனவள் தான் செய்யும் வேலையை நேசிக்கும் மிகவும் சாதாரண மனிதன் என்று ரேவதி குறிப்பிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply