Next step in AI technology : AI தொழில் நுட்பத்தில் செயற்கைக் குரலில் ஓர் இசை ஆல்பம்

‘முடிவிலி’ - செயற்கைக் குரலில் ஓர் இசை ஆல்பம் :

இந்த ‘முடிவிலி’ இசை ஆல்பத்தின் சிறப்பம்சம் ஆனது இதன் பாடல்களை பாடகர்கள் யாரும் பாடவில்லை. இந்த ஆல்பம் முழுவதும் AI தொழில்நுட்பத்தில் (Next step in AI technology) உருவாக்கப்பட்டுள்ளது. AI தொழில்நுட்பம் மூலம் ஒரு இசை ஆல்பம் முழுவதும் உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. கவிஞர் வைரமுத்து மகனான மதன் கார்க்கி, இந்த இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.

Next step in AI technology :

இப்போ AI தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் வந்திருச்சு. இந்த AI தொழில்நுட்பத்திற்கு யார் குரலும் தேவையில்லை. மனிதர்கள் டூல்ஸ் பயன்படுத்தி புதிதாக ஒரு குரலை உருவாக்க முடியும். மதன் கார்க்கி இதுக்கு ‘செய்குரல்’ என்ற பெயர் வைத்துள்ளார். அதாவது செய்த குரல் மற்றும் செய்யப்பட்ட குரல் என்று அர்த்தம். மதன் கார்க்கி பாடலோட ‘இந்த இடத்துல பேஸ் அதிகமா வேணும், இங்க வாய்ஸை குறைக்கணும், ஏத்தணும்’னு எல்லா விஷயங்களையும் புரோக்கிராம் பண்ணி உள்ளார். இந்த புரோக்கிராம் மூலமா பாட்டுக்கு ஏற்றமாதிரி வாய்ஸை மாத்திக்க முடியும். இந்த புதுசா உருவாக்கப்பட்ட ஆண் மற்றும் பெண் செய்குரல்களுக்கு ஐலா, எம்.வி.எஸ் என்ற பெயர்களை வைத்துள்ளார். இந்த ‘முடிவிலி’ இசை ஆல்பம் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தில் கிராமிய காதல் மற்றும் நகர காதல் என முழுவதும் காதல் சம்பந்தப்பட்ட பாடல்களாக இடம் பெற்றுள்ளன.

மதன் கார்க்கி - ஒரு குறிப்பு :

மதன் கார்க்கி திரை உலகில் பாடல் ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகங்கள் கொண்டவராக புகழ் பெற்று வருகிறார். மதன் கார்க்கி, பாகுபலி மற்றும் RRR உட்பட பல படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார். சூப்பர்ஹிட் பாடல்கள் பலவற்றை எழுதி உள்ளார். மதன் கார்க்கி புதுசா வந்திருக்கிற டெக்னாலஜி பற்றி தெரிந்து கொண்டார். அதைப் பயன்படுத்தி மதன் கார்க்கி தான் எழுதிய பாடல்களை இசை அமைச்சு ‘முடிவிலி’ங்கற இசைத் தொகுப்பை உருவாக்கி உள்ளார். போர்த்துகீசிய கிராமிய இசை மற்றும் கொரியன் பாப் இசை வகைகளில் இந்தப் பாடல்களை உருவாக்கி உள்ளார். மதன் கார்க்கி புதுசா ஆரம்பிச்சிருக்கிற ‘பா மியூசிக்’ மூலம் இதை வெளியிடுகிறார்.

புதிய இசை ஆல்பத்தை பற்றி மதன் கார்க்கி கூறியதாவது :

இந்த ‘முடிவிலி’ இசை ஆல்பத்தில் எல்லாமே காதலின் வெவ்வேறு நிலைகளையும், கோணங்களையும் பாடுற பாடல்களாக இருக்கும். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமா இருக்கும். ஒவ்வொரு பாடலும் தமிழ் மொழியோட அழகியலை இணைக்கும் விதமாகவும் இருக்கும்.

Latest Slideshows

Leave a Reply