NICL Recruitment 2024 : 274 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நேஷ்னல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் The National Insurance Company Limited (NICL) நிர்வாக அலுவலர் (Administrative Officer) இடங்களை நிரப்புவதற்கான (NICL Recruitment 2024) அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 274 காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. 

NICL Recruitment 2024 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : நேஷ்னல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் (Administrative Officer) பணியிடங்களை நிரப்புவதற்கு 274 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  2. கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor / Masters Degree In Statistics / Mathematics / Actuarial Science முடித்திருக்க வேண்டும்.

  3. வயதுத் தகுதி (Age) :
    நேஷ்னல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் (Administrative Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 01.12.2023 தேதி வரை 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. சம்பளம் (Salary) :
    நேஷ்னல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் (Administrative Officer) பதவிக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு சம்பளம் ரூ.85,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த Administrative Officer பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழியில் கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வாக நடைபெறும். மேலும் எழுத்துத் தேர்வு கிடையாது.
  • முதல்நிலைத் தேர்வு : முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English Language) கணிதத்தில் (Numerical Ability) மற்றும் திறனறிதல் (Reasoning Ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த  தேர்விற்கான கால அளவானது  ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் என மொத்தம் 1 மணி நேரம் ஆகும்.  முதல்நிலைத் தேர்வானது தகுதித் தேர்வு மட்டுமே. இந்த முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் மட்டுமே முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
  • முதன்மைத் தேர்வு : முதன்மைத் தேர்வானது இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வு 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் திறனறிதல், ஆங்கிலம்,  கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது காப்பீடு தொடர்பான கேள்விகள் (Insurance and Financial Marketing Awareness) என மொத்தம் 250 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்விற்கான கால அளவானது 3 மணி நேரம் ஆகும்.
  • நேர்முகத் தேர்வு : இந்த முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு இரண்டிலும் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
  1. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த Administrative Officer பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://nationalinsurance.nic.co.in/en/recruitments என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
  1. விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த Administrative Officer பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 22.01.2024 ஆகும்.
  1. விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த Administrative Officer பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.1000/- ஆகவும்  SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.250/- ஆகவும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  1. மேலும் விவரங்களுக்கு :
    https://nationalinsurance.nic.co.in/sites/default/files/NICL%20AO%20Recruitment%20Advertisment%202023-24.pdf
    என்ற அதிகாரப்பூர்வ  இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply