Nilavuku En Mel Ennadi Kobam Movie Review : நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்பட விமர்சனம்

ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள காதல் நகைச்சுவை படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். அனிகா சுரேந்தர், பிரியா பிரகாஷ் வாரியர், பவிஷ், மேத்யு தாமஸ், ஆடுகளம் நரேன், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ரம்யா ரங்கநாதன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரியங்கா மோகன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இன்று பிப்ரவரி 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (Nilavuku En Mel Ennadi Kobam Movie Review) படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

படத்தின் கதை

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் ஒரு பொதுவான காதல் கதை. நாயகன் பிரபு காதல் தோல்வியால் திரிகிறான். இதிலிருந்து அவனை விடுவிப்பதற்காக அவனது பெற்றோர் அவனுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். அரை மனதுடன் பெண் பார்க்கச் செல்லும் பிரபு, தனது பள்ளித் தோழியான பிரியா பிரகாஷ் வாரியரை சந்திக்கிறார். இருவரும் கொஞ்ச நாள் பேசி பழகிய பின் கல்யாணம் (Nilavuku En Mel Ennadi Kobam Movie Review) பண்ணிக்கலாமா வேண்டாமா என்ற முடிவுக்கு வர திட்டமிடுகிறார்கள். திருமணத்திற்கு சரி என்று சொல்ல இருக்கும் நேரத்தில், அவனது முன்னாள் காதலி நிலாவின் (அனிகா சுரேந்தர்) திருமண பத்திரிக்கை அவனுக்கு வந்து சேர்கிறது.

செஃப் ஆக வேண்டும் என்ற கனவில் இருக்கும் பிரபுவும் பெரிய பணக்கார வீட்டு பெண்ணான நிலவும் சந்தித்து கொள்கிறார்கள். அதான் நாயகன் செஃப் ஆச்சே, சமைத்து கொடுத்து நாயகியை கவர்கிறார். இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. பிரபுவின் வீட்டில் கிரீன் சிக்னல் கொடுக்கிறார்கள். ஆனால் நிலாவின் அப்பாவாக நடிக்கும் சரத்குமார் ரெட் (Nilavuku En Mel Ennadi Kobam Movie Review) சிக்னல் போடுகிறார். பிரபுவும் நிலாவும் ஏன் பிரிந்தார்கள்? அவர்கள் மீண்டும் இணைந்தார்களா? அல்லது பிரபு வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்தாரா? என்பதுதான் படத்தின் மீதி கதையாகும்.

படத்தின் விமர்சனம் (Nilavuku En Mel Ennadi Kobam Movie Review)

Nilavuku En Mel Ennadi Kobam Movie Review - Platform Tamil

காதலைப் பற்றிய படங்களில் கதையின் அடிப்படையில் புதிதாக எதையும் சொல்ல முடியுமா என்பது கேள்விதான். காதல் கதைகளின் மிகப்பெரிய சவால் பார்வையாளர்களை முடிந்தவரை நுட்பமாக இணைப்பதுதான். குறிப்பாக இன்றைய தலைமுறையில் காதல் என்பது (Nilavuku En Mel Ennadi Kobam Movie Review) இன்னும் சிக்கலான பணி. உண்மையைச் சொல்வதென்றால், எதைப் பற்றியும் அதிகம் கவலைப்படாமல் ஒரு வழக்கமான காதல் கதையைச் சொல்லியிருக்கும் தனுஷ், இன்னும் சலிப்பூட்டும் டெம்ப்ளேட் காட்சிகளுடன் அதை வழக்கமாகச் சொல்லியிருக்கிறார். காதல் தோல்விப் பாடல்கள், நகைச்சுவை, பாரம்பரியத்தை நோக்கி நகரும் காட்சிகள் என படம் முழுக்க உள்ளது. சரி ஃப்ளாஷ்பேக்காவது புதிதாய் இருக்கும் என்று நினைத்தால், லாஜிக்கே இல்லாமல் நள்ளிரவில் கடற்கரையில் ஹீரோயினுக்கு கருவாட்டு கொழம்பு வைத்து கிரிஞ்சு செய்கிறார் ஹீரோ.

பிரபுவாக நடித்திருக்கும் பவிஷ் வாத்தியார் சொல் தட்டாத மாணவன் போல உடன்மொழியில் இருந்து எல்லாத்தையும் அப்படியே தனுஷை பிரதிபலிக்கிறார். கதாநாயகி அனிகா நயன்தாராவாகவே தன்னை ஃபீல் செய்து நடித்திருக்கிறார். மலையாளப் படங்களில் சுற்றித் திரிந்த மேத்யு தாமஸ், காமெடியனாக முயற்சி செய்து தன்னைத்தானே சேதப்படுத்திக் கொள்கிறார். ரசமா, காஃபியா என்றே தெரியாத அளவுக்கு படம் நகர்கிறது. பவிஷ் மற்றும் மேத்யு தாமஸ் இடையேயான சில காட்சிகள் ரசிக்க வைக்கிறது. கோல்டன் ஸ்பேரோ பாடலில் ரம்யா ரங்கநாதன் போடும் ஸ்டெப்கள் நிச்சயம் விசில் அடிக்க (Nilavuku En Mel Ennadi Kobam Movie Review) வைக்கிறது. படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்கள் மற்றும் உடைகள் கண்களை உறுத்தாதபடி இருந்தது. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் சிறப்பு. அவ்வப்போது வரும் சில வரிகளை மனதாரப் பாராட்டலாம்.

Latest Slideshows

Leave a Reply