NIOT RECRUITMENT - மாத சம்பளம் Rs. 20,000 முதல் Rs. 67,000 வரை
NIOT RECRUITMENT: சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள அமைந்துள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓஷன் டெக்னாலஜி (NIOT – National Institute Of Ocean & Technology) ஆனது திட்ட விஞ்ஞானி (Project Scientist), திட்ட தொழில்நுட்ப வல்லுநர் (Project Technician) போன்ற பணிகளுக்கான தேர்வு செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விளம்பர எண் NIOT/E&P/03/2023.
NIOT விண்ணப்பப் படிவத்தை NIOT அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணப்ப இணையதளம் மூலம் அணுகலாம். நேரடி இணைப்பும் வழங்கப்பட்டு உள்ளது.
28 பிப்ரவரி 2023 மாலை 5.00 மணி வரை தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் www.niot.res.in மூலம் விண்ணப்பப் படிவம் பெறலாம்.
பணிகளுக்கான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு விவரங்கள்
10ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதல் B.E, B.Tech, M.E, (Mechanical Engg, Ocean Engg, Civil Engg, Electrical Engg, Electronics & Communications), Msc (Ph.d in Marine Biology, Marine science, Zoology & Botany) வரை. அதிக பட்ச வயது வரம்பு 35 முதல் 50-து ஆகும்.
NIOT 2023 விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்
- சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
- கல்வித் தகுதிச் சான்றிதழ்.
- அனுபவச் சான்றிதழ்
- பிறந்த தேதி சான்று போன்றவை
- விண்ணப்பதாரரின் கையொப்பம்
- சாதிச் சான்றிதழ்
- அடையாள அட்டை
NIOT தேர்வுக் குழு ஆனது பெறப்பட்ட விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் / தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மார்ச் 9, 2023 முதல் 17, 2023 வரை நேர்காணல் மற்றும் தேர்வு நடத்தப்படும். அதிகாரிகள் NIOT நேர்காணலை காலை 10.00 மணிக்கு நடத்துவார்கள் மற்றும் தேர்வை காலை 10.30 மணிக்குத் தொடங்குவார்கள்.
விண்ணப்பதாரர்களின் செயல்திறன் அடிப்படையில் நேர்காணல் மற்றும் தேர்வில் தேர்வு செய்யப்படுவார்கள். பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்தியாவில் உள்ள தீவுகள் உட்பட எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள். NIOT ஆட்சேர்ப்பு 2023 இல் ஆர்வமாக இருந்தால், சம்பந்தப்பட்ட ஆணைய விளம்பர இணையதளத்தில் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வரவேற்கப்படுகிறார்கள்.
ஒப்பந்த வகை அடிப்படையில் மட்டுமே இந்த ஆட்சேர்ப்பு நடத்தப்படும். உயர் வயது வரம்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.