
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
தமிழகம் NITI Aayog வளர்ச்சிக் குறியீட்டில் 3வது இடத்தை பிடித்துள்ளது
2023-24ம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டை NITI Aayog வெளியிட்டுள்ளது :
இந்த வெளியீட்டில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் நாட்டில் ஏற்பட்டுள்ள சிறந்த முன்னேற்றங்கள் ஆனது எடுத்துரைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு இந்தக் குறியீட்டில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் 3வது இடத்தில் உள்ளது மற்றும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. நிதி ஆயோக் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
- உத்தரகாண்ட் மற்றும் கேரளா 79 மதிப்பீடுகளுடன் முதல் 2 இடத்தில் உள்ளன.
- தமிழ்நாடு 3வது இடத்தில் 78 மதிப்பீடுகளுடன் உள்ளது.
- கோவா 4வது இடத்தில் 77 மதிப்பீடுகளுடன் உள்ளது.
- நாகாலாந்து 63 மதிப்பீடுகளையும் பெற்றுள்ளது.
- ஜார்க்கண்ட் மாநிலம் 62 மதிப்பீடுகளை பெற்றுள்ளது.
- பீகார் மாநிலம் 57 மதிப்பீடுகளை பெற்றுள்ளது.
யூனியன் பிரதேசங்களில் சண்டிகர், ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் டெல்லி ஆகியவை நல்ல இடத்தில் உள்ளன.
தமிழகம் NITI Aayog வளர்ச்சிக் குறியீட்டில் 3வது இடத்தை பிடித்துள்ளது :
தமிழ்நாடு சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. தமிழ்நாடு 2018-ல் 66 ஆக இருந்து 78 மதிப்பீடுகளுடன் முன்னேற்றம் பெற்றுள்ளது. சமூக சமத்துவம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த உறுதிப்பாட்டை இது எடுத்துரைக்கிறது.
தமிழ்நாடு ஆனது கண்ணியமான வேலை, பொருளாதார வளர்ச்சி, பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துதல், நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற பயனுள்ள கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் வர்த்தகம், தொழில் துறைகளில் தனது முன்னிலையை நிலைநிறுத்தி உள்ளது. கணிசமான முன்னேற்றத்தை மாநிலத்தின் சுகாதார முன் முயற்சிகள் காட்டுகின்றன. 97.18 சதவீத பிரசவம் முறையான மருத்துவமனைகளில் 2023-24ம் ஆண்டில் நடைபெற்றுள்ளன. தரமான சுகாதாரப் பராமரிப்பை உறுதி செய்யும் சமூக சுகாதார திட்டங்களே இந்த சாதனைக்கு காரணம்.
NITI Aayog பற்றிய குறிப்புக்கள் :
NITI – National Institution For Transforming India என்பது NITI-ன் பொருளாகும். இது இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழு ஆகும். இந்த NITI Aayog ஆனது 2015, January மாதம் 1 ஆம் தேதியிலிருந்து செயல்பட துவங்கியுள்ளது. இந்திய Govt-ன் மூலோபாய மற்றும் நீண்ட கால கொள்கைகள் மற்றும் திட்டங்களை வடிவமைக்கும் போது, நிதி ஆயோக் ஆனது மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான தொடர்புடைய தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்குகின்றது.
இந்திய அரசாங்கம் ஆனது அதன் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு இணங்க, 1950 இல் நிறுவப்பட்ட திட்டக் கமிஷனுக்குப் பதிலாக மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு NITI Aayog-க்கை அமைத்தது. நிதி ஆயோக் ஆனது இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் நடத்திச் செல்வதற்கான கொள்கைகளை பரிந்துரை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆற்றல்மிக்க மற்றும் வலிமையான தேசத்தை உருவாக்க உதவும் வலுவான அரசை உருவாக்குவதை NITI Aayog ஆனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு ஆனது ‘NITI For States’ என்ற புதிய தகவல் தளத்தை, மாநிலங்கள் முக்கிய துறைகளில் சிறந்த திட்டங்களை வகுக்க உதவும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தளத்தில் கல்வி, வேளாண், எரி, ஆற்றல், சுகாதாரம், திறன் மேம்பாடு, உற்பத்தி, சுற்றுலா, நகர்ப்புற மேம்பாடு, நீர் மேலாண்மை, சிறு, குறு தொழில்நிறுவனங்கள் உள்ளிட்ட 10 துறைகள் தொடர்புடைய 7,000 சிறந்த நடைமுறைகள், 5,000 கொள்கை ஆவணங்கள், 900 தரவுத் தொகுப்புகள் உட்பட முக்கிய விவரங்கள் இருக்கும். இந்தத் தளம் ஆனது ஒவ்வொரு மாநிலமும் ஏனைய மாநிலங்களின் போக்குகளை அறிந்து கொள்ளவும் அதற்கேற்ப தங்கள் மாநிலத்தில் கொள்கைகளை உருவாக்குவதற்கும் பயனுடையதாக இருக்கும் என்று NITI Aayog குறிப்பிட்டுள்ளது.
Latest Slideshows
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது