No Of Wards In Chennai Will Be Increased : சென்னை மாநகர வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் :

தமிழகத்தின் தலைநகரமாக திகழ்கின்ற சென்னையில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது போக்குவரத்து உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரில் மொத்த மக்கள் தொகை 89 லட்சமாக உள்ளது. தற்போது சென்னை மாநகரில் 200 வார்டுகள் உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் சராசரியாக 40 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள் வசிக்கின்றனர். எனவே சென்னையில் உள்ள 200 வார்டுகளை அதிகப்படுத்தி 300 ஆக உயர்த்தி மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவதற்கான செயல்பாடுகள் (No Of Wards In Chennai Will Be Increased) நடைபெற்று வருகின்றன.

சென்னை மாநகராட்சி மேம்பாட்டுப் பணிகள் :

குறிப்பாக சென்னை மாநகராட்சி மேம்பாட்டிற்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

  • அதன்படி, சென்னை மாநகராட்சியில் இந்த 2024 ஆம் ஆண்டு பள்ளிக் கட்டடங்கள் ஆனது ரூ.35 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்பதோடு, ரூ.30 கோடி மதிப்பீட்டில் 16 புதிய பள்ளிக் கட்டிடங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மொத்தமாக 100 ஸ்மார்ட் வகுப்பறைகள் சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 10 கோடி மதிப்பீட்டில் 14 புதிய பூங்காக்கள் மற்றும் ஆறு நவீன விளையாட்டு திடல்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • புதிய பாலம் மற்றும் மேம்பாலங்கள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கட்டப்படும்.
  • ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் 10 நீர்நிலைகள் புனரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ரிப்பன் கட்டட வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக புதிய மாமன்ற கூடம் ரூ.75 கோடியில் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச தரத்தில் அண்ணாநகர் டவர் பூங்கா ஆனது மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தீவுத்திடலுக்காக ரூ.50 கோடி நிதியில் அறிவிக்கப்பட்ட பொழுதுபோக்கு மையம் அமைக்கும் புதிய திட்டம் ஆனது தற்போது ரூ.104 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் 5 ஏக்கர் நிலம் நிரந்தர கண்காட்சி வளாகம் மற்றும் கடைகள் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 400 கடைகள் கட்டப்பட உள்ளன. ஒரே இடத்தில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டுகள், பல வகையான உணவுகள், கேளிக்கை அம்சங்கள் என அத்தனையும் காண முடியும். இதற்காக தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலம் மேம்படுத்தப்படும். மேலும் நிரந்தர கண்காட்சிக்கூடம் சிப்பி வடிவில் கட்டப்பட உள்ளது.

இந்த புதிய அறிவிப்புகளை (No Of Wards In Chennai Will Be Increased) அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்தபோது வெளியிட்டார்.

Latest Slideshows

Leave a Reply