Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது

2024 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு (Nobel Prize For Literature 2024) தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு வழங்கப்படுகிறது. ‘மனித வாழ்க்கையின் பலவீனத்தை’ வெளிப்படுத்தும் அவருடைய கவிதைக்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

1895-ம் ஆண்டு தொடங்கப்பட்டது :

ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் நோபல் பரிசு வழங்குவது 1895 ஆம் ஆண்டு முதன் முதலாக தொடங்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வேதியியல், மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி என மொத்தம் 6 துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டிலும் மற்ற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.    

Nobel Prize For Literature 2024 - எழுத்தாளர் ஹான் காங் :

இந்நிலையில்  இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு வழங்கப்படுகிறது. இவர் தென்கொரியாவில் குவாங்ஜு நகரில் 1970-ம் ஆண்டு எழுத்தாளர் குடும்பத்தில் பிறந்தார். ஹான் காங் எழுத்து மட்டுமின்றி கலை மற்றும் இசையிலும் பிரபலமானவர். எப்பொழுதும் வரலாற்று ரீதியாக நடக்கும் கொடுமைகள், மனித வாழ்க்கையில் ஏற்படும்  பலவீனம் தொடர்பாக கவிதை, உரைநடையை எழுதி வந்தார். மேலும் 1993-ம் ஆண்டு “Literature And Society” என்னும் இதழில் ஹான் காங் கவிதைகளை வெளியீட்டு மிகவும் பிரபலம் அடைந்தார். மேலும் 1995-ம் ஆண்டு “லவ் ஆஃப் யோசு” என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பல்வேறு நாவல்கள், சிறுகதைகள் மற்றும் உரைநடை என பல படைப்புக்களை வெளியிட்டார்.       

இந்நிலையில் நேற்று 2024-ம் வருடத்திற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் இயற்பியலாளர் ஜான் ஜே ஹாப்ஃபீல்ட் மற்றும் பிரிட்டிஷ் உளவியலாளர் ஜெஃப்ரி இ ஹிண்டன் ஆகியோருக்கு ‘செயற்கை நரம்பியல் நெட்வொர்க் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் அடிப்படை செயல்திறன்’ கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேதியியலுக்கான நோபல் பரிசு “புரதம்” சார்ந்த ஆராய்ச்சிக்காக இங்கிலாந்தின் டெமிஸ்  ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் மற்றும் அமெரிக்காவின் டேவிட் பேக்கர் ஆகிய 3 பேருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசு ‘மனித வாழ்க்கையின் பலவீனம்’ (Frailty of Human Life) என்ற கவிதைக்காக எழுத்தாளர் ஹான் காங்கிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply