Noodles Movie Review : நூடுல்ஸ் படத்தின் விமர்சனம்

தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நூடுல்ஸ் திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ளது. பொதுவாக சினிமா என்று வரும்போது என்ன நடக்கும் என்பது ரசிகர்களால் கணிக்க முடியாத ஒன்றாகும். அதாவது மக்களை கவரும் வகையில் எடுக்கப்படும் அனைத்து பெரிய பட்ஜெட் படங்களும் அதற்கு நேர்மாறாக இருக்கும். மறுபுறம், அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகும் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகும். அதுமட்டுமின்றி OTT தளங்களின் வருகையால் சிறிய பட்ஜெட் படங்கள் கூட மக்களை எளிதில் சென்றடைய செய்கிறது. உதாரணமாக, இந்த ஆண்டு வெளியான அயோத்தி, டாடா, போர்தொழில், குட்நைட் உள்ளிட்ட படங்களைக் குறிப்பிடலாம்.

இந்நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நூடுல்ஸ் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன், ஆஜியா, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை அருவி, அயலி, மாவீரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மதன் இயக்கியுள்ளார். ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் தம்பி அருண் பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

படத்தின் கதை சுருக்கம் :

ஒரு சனிக்கிழமை இரவு, ஹரிஸ் உத்தமன், ஷூலா மற்றும் வீட்டிற்கு அருகே குடியிருக்கும் குடும்பத்தினர் என அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் அந்த ஏரியா போலீஸ்காரராக நடிக்கும் மதன் சத்தம் கேட்டு, அங்குள்ளவர்களை மிரட்டும் தோணியில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிஷ் உத்தமன், ஷூலா மற்றும் அக்கம்பக்கத்தினர் இன்ஸ்பெக்டர் மதனுக்கு எதிராக பேசுகின்றனர். இன்ஸ்பெக்டர் மதன் அவர்களை பழிவாங்கும் நோக்கில் வேறு ஒரு பிரச்சனையில் சிக்க வைப்பார் அதன் பிறகு என நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதையாகும் .

Noodles Movie Review :

Noodles Movie Review : படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஹரிஸ் உத்தமன், குடும்பத்தை பாதுகாத்து போலீஸ் அதிகாரியை பழிவாங்கும் நடிப்பை பாராட்டலாம். ஷீலா ராஜ்குமார் தனது நடிப்பை கண்களால் வெளிப்படுத்தி நிஜ கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். வழக்கறிஞர் வேடத்தில் வரும் வசந்த் மாரிமுத்து பயம் கலந்த நடிப்பை ரசிக்கும்படியாக வெளிப்படுத்தியுள்ளார். நடிகரும் இயக்குனருமான மதன் மிரட்டி, கொடூரமான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இரவு முதல் மறுநாள் காலை வரை ஒரு வீட்டில் கதையை முடித்து கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குனர் மதனின் திறமை பாராட்டுக்குரியது. நல்ல கதைக்கு பெரிய பணம் தேவையில்லை என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம். வினோத் ராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம் சேர்கிறது. ஒரு காட்சியைத் தவிர கேமரா வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை கதையுடன் பயணிக்கிறது. இந்த படம் தற்போது வரவேற்பை (Noodles Movie Review) பெற்று வருகிறது.

Latest Slideshows

Leave a Reply