Noodles Movie Trailer : 'நூடுல்ஸ்' படத்தின் ட்ரைலர் வெளியீடு...

Noodles Movie Trailer :

ஹரிஷ் உத்தமம் நடிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’ திரைப்படத்தின் ட்ரைலர் (Noodles Movie Trailer)  வெளியாகியுள்ளது.

அருவி, கர்ணன், அயோத்தி, மாவீரன், மாமன்னன், துணிவு ஆகிய படங்களில் நாயகனாக நடித்த பிரபல நடிகர் மதன் இயக்கியுள்ள திரைப்படம் ‘நூடுல்ஸ்’ ஆகும். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் முத்திரை பதித்து, பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும், சில படங்களில் கதையின் நாயகனாக நடித்து வரும் பிரபல நடிகர் ஹரிஷ் உத்தமன் இப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். ‘டு லெட்’, ‘மண்டேலா’ உள்ளிட்ட படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்ற ஷீலா ராஜ்குமார் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவர்களது மகளாக ரவுடி பேபி புகழ் ஆழியா நடிக்க, முக்கிய வேடத்தில் திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா மற்றும் பலர் நடிக்க, ‘அருவி’ மதனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

வினோத் ஒளிப்பதிவு செய்ய இசைமைப்பாளர் ராபர்ட் சற்குணம் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை சரத்குமார் மேற்கொள்ள, கலை இயக்குனராக கென்னடி பொறுப்பேற்றுள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட சிந்தனையைத் தூண்டும் படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாட்டம் கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமட்ஷி, சமீபத்தில் ‘நூடுல்ஸ்’ படத்தை பார்த்தார் அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால், தனது வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்நிலையில் ட்ரைலர் (Noodles Movie Trailer)  தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இரண்டு நிமிடத்தில் ஹீரோ எடுக்கும் முடிவால் படத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதையாகும். இரண்டு நிமிட நிகழ்வுகளின் திருப்பங்களும் எதிர்விளைவுகளும், அதிலும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஹீரோ, ஹீரோயின் மற்றும் அவர்களது குழந்தை எப்படி சிக்கலில் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதுதான் இந்த ‘நூடுல்ஸ்’ படத்தின் கதைக்களமாகும். எதிர்பாராத பிரச்சனையில், படத்தைப் பார்க்கும் அனைவரையும் மிகுந்த எதிர்பார்ப்புடன் மூன்றரை மணிநேரம் சிரிப்புடனும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் உட்கார வைக்கும் வகையில் இந்தப் படம் ட்ரைலர் (Noodles Movie Trailer) உருவாகி இருக்கிறது. அதாவது இரண்டு நிமிடத்தில் ஹீரோ எடுக்கும் முடிவால் படத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதையாகும்.

Latest Slideshows

Leave a Reply