North Chennai Development Project: ரூ.4,181 கோடி மதிப்பீட்டில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வடசென்னையை அடியோடு மாற்றப்போகும் ‘North Chennai Development Project'

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வடசென்னை வளர்ச்சி திட்ட விரிவாக்க பணிகளை ரூ.4,181 மதிப்பீட்டில் 14/03/2024 அன்று தொடங்கி வைத்துள்ளார். சென்னை இப்போது  நன்றாக புதுப்பொலிவு அடைந்து கொண்டு வருகிறது. இதற்காகவே தீட்டப்பட்டிருக்கின்ற சிறப்புத் திட்டங்களில் ஒன்று தான்  ‘வடசென்னை வளர்ச்சித் திட்டம்’  ஆகும்.

வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். ஆனால் இப்போது வடசென்னை மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகள் மற்றும் வடசென்னையின் மக்கள் தொகை, இடப்பற்றாக்குறை, மக்கள் நெரிசல், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றையெல்லாம் மனதில் வைத்து,  தமிழக அரசு இன்றைக்கு அந்தத் தொகையை 4 ஆயிரத்து 181 கோடி ரூபாய் என  நான்கு மடங்காக உயர்த்தி உள்ளது.

இந்த   ‘வடசென்னை வளர்ச்சித் திட்டம்’ மெகா திட்டம் ஆனது 11 அரசுத் துறைகளுடன் இணைந்து செயல்பட போகின்றது. முதல்வர் ஸ்டாலின்,”வடசென்னையில் 200 திட்டங்கள் அடுத்த 3 ஆண்டுகளில்  நிறைவேற்றப்பட இருக்கிறது.” என்று அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின்கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்

  • சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் திட்டங்களுக்கு 440 கோடியே 62 லட்ச ரூபாய்  ஒதுக்கீடு செய்யும்.
  • இதர துறைகளின் திட்டங்களுக்கு, 886 கோடியே 46 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யும்.

அடுத்து வரும் ரெண்டு ஆண்டுகளில் மீதமுள்ள நிதியை  சம்பந்தப்பட்ட துறைகள், வாரியங்கள் மற்றும் நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடுகள் மூலம் முறையாக ஒதுக்கீடு செய்யப்படும்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கின்ற 87 திட்டங்களின் விவரங்கள்

  • கொடுங்கையூரில் 640 கோடி ரூபாய் செலவில், உயிரி சுரங்கத் திட்டம்
  • 238 கோடி ரூபாய் செலவில் இரண்டு பெரிய பாலங்கள்
  • 80 கோடி ரூபாயில் தணிகாசலம் கால்வாய் புனரமைப்புத் திட்டம்
  • பாரிமுனை பேருந்து முனையம் மறுகட்டுமானம் 823 கோடி ரூபாய் செலவில்
  • 15 இடங்களில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 7 ஆயிரத்து 60 சேதமடைந்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 9 ஆயிரத்து 798 புதிய குடியிருப்புகள் ஆயிரத்து 567 கோடியே 68 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப் படும்.

இப்படி, இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கின்ற 87 திட்டங்கள் உட்பட அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் முடிவுறுகிறபோது, வடசென்னையின் வரலாற்றில், ஒரு புதிய சகாப்தத்தை திமுக எழுதியிருக்கும்” இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பேசினார்

Latest Slideshows

Leave a Reply