North Chennai Real Estate Development : ரியல் எஸ்டேட் துறை எதிர்பார்க்காத கேள்விக்குறி வடக்கு வளர்கிறதா? தெற்கு தேய்கிறதா ?

North Chennai Real Estate Development - ரியல் எஸ்டேட் துறையில் தென் சென்னையை முந்துமா வடசென்னை?

ரியல் எஸ்டேட் துறையில் எதிர்பார்க்காத ஒரு Twist ஆனது ஏற்பட்டு உள்ளது. தென்சென்னை அளவிற்கு சமமாக அல்லது தென்சென்னையை விட மிகவும் சிறப்பாக வடசென்னையை வளர்க்கும் முடிவில் சமீபத்தில் ஒரு ‘வடசென்னை வளர்ச்சி திட்டம்’ ஆனது கொண்டு (North Chennai Real Estate Development) வரப்பட்டு உள்ளது. தற்போதைய கால மாற்றத்தால் ரியல் எஸ்டேட் துறையில் தென் சென்னையுடன் சரிசமமாக போட்டியிட்டு வளர்ச்சி அடையும் விதத்தில் புதிய ரியல் எஸ்டேட் திட்டங்களுடன் வடசென்னை ஆனது (North Chennai Real Estate Development) ஏற்றம் கண்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட புதிய ரியல் எஸ்டேட் திட்டங்களுடன் வேகமான வளர்ச்சியில் வடசென்னை ஏற்றம் கண்டு வருகிறது. வேகமான இந்த வளர்ச்சிக்கு சென்னை மெட்ரோவின் விரிவாக்கம் மற்றும் அந்த பகுதியில் நடந்து வரும் உள்கட்டமைப்பு திட்டங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள்தான் காரணம் என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் பலரும் கூறுகின்றனர்.

வடசென்னையின் வளர்ச்சிக்கு உகந்தவையாக கருதப்படும் காரணங்கள் :

North Chennai Real Estate Development : வடசென்னையின் வேகவளர்ச்சியை மையப்படுத்தி, வடசென்னையில் உள்ள குறைகளை போக்க, 1,000 கோடி ரூபாய் செலவில், ‘வடசென்னை வளர்ச்சி திட்டம்’ என்ற ஒரு புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு ஆனது அறிவித்துள்ளது. மொத்தமாக வடசென்னையை ஒரு உருமாற்றம் செய்யும் விதமாக இந்த வளர்ச்சிப் பணிகள் ஆனது தொடங்க உள்ளன. அதானல் வடசென்னையின் அடிப்படை வசதிகளில் தொடங்கி அல்டிமேட் வசதிகள் வரை பலவற்றை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு ஆனது முடிவு செய்துள்ளது. பொதுவாக சென்னை போன்ற பெரிய நகரங்களில் மலிவு விலையில் இடங்கள் (i.e.நிலங்கள்) கிடைப்பது ரியல் எஸ்டேட் துறையை அதிகம் ஈர்க்கும். அந்த விதத்தில் நகரின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது வட சென்னையில் நிலத்தின் விலைகள் குறைவாக இருப்பதால் வட சென்னை ஆனது ரியல் எஸ்டேட் திட்டங்கள் மேற்கொள்ள வசதியான இடமாக மாறி வருகிறது.

வட சென்னையில் குறிப்பாக பெரம்பூர், கொளத்தூர், மாதவரம், திருவொற்றியூர், புரசைவாக்கம், தண்டியார்பேட்டை, எண்ணூர், மூலக்கடை , ராயபுரம், சவுகார்பேட்டை மற்றும் மணலி போன்ற இடங்களில் ரியல் எஸ்டேட் துறை ஆனது வேகமாக வளர்ந்து வருகிறது. இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (CREDAI) பகிர்ந்துள்ள விவரங்களின்படி, வடசென்னையின் வளர்ச்சிக்கு இ-காமர்ஸ் பிரிவின் வளர்ச்சி ஆனது ஒருவகையில் காரணமாக உள்ளது. வட சென்னையில் மாதவரம்-ரெட் ஹில்ஸ் பெல்ட் முதல் பெரியபாளையம் மற்றும் ஒரக்காடு கிளஸ்டர் வரையிலான இடங்கள் ஆனது ரியல் எஸ்டேட் துறையில் மிக வேகமாக வளர்ச்சியை  காண்கின்றன. 

A கிரேடு கட்டுமானங்களுக்கு உகந்தவையாக பெரியபாளையம் சாலை மற்றும் ரெட் ஹில்ஸ் ஆகியவை பெரிய கிடங்கு வசதிகளுடன் மாறி உள்ளன. இந்த காரணிகள் அனைத்தும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களை ஈர்க்கின்றன. சென்னையில் தென்சென்னை தொடர்ந்து வளர்ந்து வந்தாலும் இன்னும் வடசென்னை பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ஆனது வடசென்னையின் வளர்ச்சியை குறி வைத்து முக்கியமான “பிக் ப்ராஜெக்ட்” திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது

வட சென்னையில் உள்ளவர்கள் கால்பந்து, குத்துச்சண்டையில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள் என்பதால்  கால்பந்து மற்றும் குத்துசண்டை மைதானங்கள் வட சென்னையில் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.  இதற்கான திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தென்சென்னை அளவிற்கு சமமாக அல்லது தென்சென்னையை விட மேலும் சிறப்பாக வடசென்னையை வளர்க்கும் முடிவில் இந்த ‘வடசென்னை வளர்ச்சி திட்டம்’ ஆனது கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த ‘வடசென்னை வளர்ச்சி திட்டம்’ ஆனது சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இந்த பணிகள் எல்லாம் நடைமுறைப்படுத்தப்பட  உள்ளன. வடசென்னையின் பல்வேறு பகுதியில் உள்ள உள்கட்டமைப்பு இடைவெளிகளைக் கண்டறிய வுமன் கிறிஸ்டியன் கல்லூரி மாணவர்கள் மற்றும் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவர்கள் ஒரு கணக்கெடுப்பைத் (Survey) தொடங்கியுள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply