NSIC Registration And Job Fair 2024 : NSIC பதிவுமுறை மற்றும் வேலைவாய்ப்பு கண்காட்சி
NSIC (தேசிய சிறுதொழில் கழகம்) - ஒரு குறிப்பு :
நாடு முழுவதும் தேசிய சிறுதொழில் கழகங்கள் (NSIC) உள்ளன. இந்த NSIC ஆனது ISO 9001:2015 சான்றளிக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். இதன் அலுவலகங்கள் நகரங்களில் சிறந்த இடங்களில் அமைந்துள்ளன. இந்தியாவில் NSIC ஆனது சிறு வணிகங்களுக்கு நிதி உதவி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அவர்களின் வணிகத்தைப் பற்றிய தேவையான தகவல்களை வழங்கி அதன் மூலம் அவர்களை ஊக்குவிக்கும் ஒரு அரசு சார்ந்த அமைப்பாகும். சிறு தொழில்களுக்காக தொடங்கப்பட்ட திட்டங்களின் முழுமையான பலன்களைப் பெற சிறு வணிகங்களுக்கான NSIC பதிவு ஆனது கட்டாயமாகும். இந்த NSIC ஆனது தொழில்முனைவோருக்கு அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் மற்றும் சிறுதொழில்களுக்கு இதர வசதிகளை வழங்கவும் பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்கின்றது. NSIC ஆனது மத்திய அரசின் MSME துறையின் கீழ் செயல்படுகிறது. MSME சட்டத்தில் உள்ள வரையறைகளின்படி அனைத்து குறு மற்றும் சிறு நிறுவனங்களும் NSIC பதிவுக்கு தகுதி பெற்றவை ஆகும். MSMEகளின் கீழ் பலன்கள் ஆனது வழங்கப்படுகின்றன.
NSIC Registration And Job Fair 2024 :
NSIC பதிவுக்கு விண்ணப்பதாரர் MSME அதிகாரப்பூர்வ போர்ட்டலை சரியான முறையில் பார்க்க வேண்டும். இந்த போர்ட்டலை சரியான முறையில் பார்த்தபின் NSIC பதிவுக்கு விண்ணப்பதாரர், NSICஐ அணுக வேண்டும். விண்ணப்பதாரர் ஆன்லைனில் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதன்பின் NSIC சான்றிதழ் உருவாக்கப்படும். அரசு ஆனது NSIC பதிவுக்காக அரசு கட்டணமாக ரூ.5,000 வசூலிக்கிறது. சென்னை NSIC கழகத்தின் தொழில்நுட்ப சேவை மையம் ஆனது இந்த கிளையின் சார்பில், MSME (சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்) தொழில் துறைக்குத் தேவையான பணியாளர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்த NSIC ஆனது தொழில்முனைவோருக்கு அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் மற்றும் சிறுதொழில்களுக்கு இதர வசதிகளை வழங்கவும் பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்கின்றது.
சென்னையில் NSIC-ன் சார்பில், ஜூலை 25-ம் தேதி வேலைவாய்ப்புக் கண்காட்சி (NSIC Registration And Job Fair 2024) நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்புக் கண்காட்சி ஆனது No.24, கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-32 என்ற முகவரியில் உள்ள NSIC அலுவலகத்தில் காலை 9:30AM மணிக்கு தொடங்குகிறது. இந்த வேலைவாய்ப்புக் கண்காட்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் https://tinyurl.com/nsic-register என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களைப் பெற 044-2225 2335, 73053 75041 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.
Latest Slideshows
-
A Journey Of Ten Thousand Miles : பத்தாயிரம் மைல் பயணம் புத்தக விமர்சனம்
-
Investigations in Hydrothermal Sulfide Systems in Ocean : கடலின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் Hydrothermal Sulphide பற்றிய ஆய்வுகள்
-
Intetesting Facts about Chameleons: பச்சோந்திகள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
SP Balasubrahmanyam Road : மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயரில் சாலை திறப்பு
-
Valentine's Day 2025 : காதலர் தினம் வரலாறும் & கொண்டாட்டமும்
-
SBI Special Officer Recruitment 2025 : எஸ்பிஐ வங்கியில் 42 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Success Story Of Grand Sweets : கிராண்ட் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் வெற்றிக் கதை
-
Thaipusam 2025 : தைப்பூசம் வரலாறும் கொண்டாடும் முறையும்
-
NASA Plans To Two Satellites : சூரியனை ஆய்வு செய்ய ஸ்பெரெக்ஸ் மற்றும் பஞ்ச் என்ற இரு செயற்கைகோளை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது
-
Passion Fruit Benefits In Tamil : பேஷன் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்