Nubia Z70 Ultra Smartphone Launches : நுபியா நிறுவனம் புதிய நுபியா Z70 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது

இந்தியாவில் நேற்று புதிய Nubia Z70 Ultra ஸ்மார்ட்போனை (Nubia Z70 Ultra Smartphone Launches) நுபியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முதலில் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்த இந்த ஸ்மார்ட்போனை தற்போது இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த போனின் பல்வேறு சிறப்பம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

Nubia Z70 Ultra Smartphone Launches

1. Nubia Z70 Ultra Display

இந்த நுபியா Z70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.85-இன்ச் அளவுள்ள 1.5K OLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 960Hz டச் சாம்ப்ளிங் ரேட் என சிறந்த பாதுகாப்பு வசதியுடன் விற்பனைக்கு (Nubia Z70 Ultra Smartphone Launches) வந்துள்ளது. மேலும் இந்த நுபியா போனில் சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல் திறனை வழங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2. Nubia Z70 Ultra Camera

இந்த நுபியா Z70 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 50 MP Sony IMX 906 சென்சார் கேமரா மற்றும் 50MP OV50D ஆம்னிவிஷன் கேமரா மற்றும் OIS ஆதரவு கொண்ட 64MP டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே தனியே இந்த போனின் முன்பக்கத்தில் 16MP ஆதரவு கொண்ட ஆம்னிவிஷன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

3. Nubia Z70 Ultra Storage

இந்த Nubia Z70 Ultra ஸ்மார்ட்போன் 12GB RAM + 128 GB மெமரி மற்றும் 16GB RAM + 256GB மெமரி மற்றும் 24GB RAM + 512GB மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு (Nubia Z70 Ultra Smartphone Launches) வந்துள்ளது. மேலும் இந்த போன்  Android 15 Nebula IS உடன் இயங்கும் என நுபியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

4. Nubia Z70 Ultra Battery

இந்த நுபியா Z70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி வசதியுடன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்வதற்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.

5. Nubia Z70 Ultra Colors

இந்த நுபியா Z70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் எல்லோவ் (Yellow), ப்ளூ (Blue) மற்றும் ப்ளூ ஸ்டாரி நைட் (Blue Starry Night) என மூன்று நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

6. Nubia Z70 Ultra Rate

நேற்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த நுபியா Z70 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12GB RAM + 128GB மெமரி மாடலின் விலை ரூ.61000/- ஆகவும், 16GB RAM + 256GB மெமரி மாடலின் விலை ரூ.71000/- ஆகவும் (Nubia Z70 Ultra Smartphone Launches) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் அதிகாரப்பூர்வ விற்பனை டிசம்பர் 5-ம் தேதி முதல் துவங்குகிறது.

Latest Slideshows

Leave a Reply