Nuclear Power Plant On Moon : நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யாவுடன் இந்தியா இணைந்தது

இந்த நூற்றாண்டில் நிலவு குறித்த ஆய்வுகள் பெரிதாக இல்லாத நிலையில் நம் இந்தியாவின் சந்திரயான்- 3 திட்டத்தின் வெற்றிக்கு பிறகு உலக நாடுகள் மீண்டும் நிலவு குறித்த ஆய்வுகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இதன் அடுத்தகட்டமாக நிலவில் அணுமின் நிலையத்தை (Nuclear Power Plant On Moon) அமைக்கும் திட்டத்தை இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலவு குறித்த ஆய்வுகள் தற்போது சர்வதேச அளவில் தீவிரமாக நடந்து வரும் நிலையில் உலகின் பல முன்னணி நாடுகள் நிலவில் ஆய்வு கூடத்தை அமைக்க முயன்று வருகின்றன.

நிலவில் அணுமின் நிலையம் (Nuclear Power Plant On Moon) :

  • இந்நிலையில் ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனமான “ரோசாட்டம் நிறுவனம்” நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்க (Nuclear Power Plant On Moon) திட்டமிட்டுள்ளது.
  • ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் அலெக்ஸி லிகாச்சேவ் கூறுகையில் “நாங்கள் இப்போது நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம். வரும் காலங்களில் நிலவில் பல சர்வதேச திட்டங்களை அமைக்க நாங்கள் அடித்தளமிட்டு வருகிறோம். நிலவு பற்றிய எங்களின் ஆய்வுகளில் இணைந்து பணியாற்ற இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன என தெரிவித்தார்.

0.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி :

  • வரும் காலங்களில் நிலவில் தங்கி ஆய்வுகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கு பயன்படும் வகையில் 0.5 மெகாவாட் மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு சிறிய அணு உலையை நிறுவ ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையம் :

  • நிலவில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கூட்டாக இந்த ஆய்வகத்தை முதலில் உருவாக்குகிறது. ‘சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம் வரும் 2035 முதல் 2045 ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என ரஷ்யா கூறியுள்ளது.
  • இத்திட்டத்தில் ரஷ்யா மற்றும் சீனா மட்டுமே இணைந்து இருந்தாலும் மற்ற நாடுகளும் தங்களுடன் இத்திட்டத்தில் இணையலாம் என ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்தியா இணைந்தது :

  • நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் இத்திட்டத்தில் தற்போது இந்தியாவும் கைகோர்த்து உள்ளது. உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் மனிதர்களின் ஈடுபாடு மிக குறைவாக இருக்கும் வகையில் அணுசக்தி நிலையம் அமைக்கப்படுகிறது.
  • இதற்கான அனைத்து ஆரம்பகட்ட பணிகளையும் ரஷ்யா ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் வரும் 2036 ஆம் ஆண்டுக்குள் இந்த அணு உலையை செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply