Nvidia Has Risen to The Second-Largest Company : அமெரிக்கப் பங்குச் சந்தையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக Nvidia உயர்ந்துள்ளது

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனம் Nvidia ஆனது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் சார்ந்த செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் உலகின் சிறந்த  நிறுவனமாக திகழ்கிறது. Nvidia ஆனது USD 3 டிரில்லியன் சந்தை வரம்பைக் கடந்து, இரண்டாவது பெரிய அமெரிக்க நிறுவனமாக Apple-ளை முந்தி உள்ளது. Apple-ளின் சந்தை மதிப்பு ஆனது 3.003 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ஆனது 3.15 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். அண்மையில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5 சதவீதம் அதிகரித்து உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், இந்த நிறுவனத்தின் பங்குகள் 3,500% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. Nvidia ஆனது 2024-ல் மட்டும் சுமார் 147% வளர்ச்சியை கண்டுள்ளது. தனால் தற்போது இந்த நிறுவனத்தின் பங்கின் விலை 1,224.40 டாலர்கள் என்ற மதிப்பில் உள்ளது. அமெரிக்கப் பங்குச் சந்தையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக இந்த நிறுவனம் உயர்வை அடைந்துள்ளது.

AI சில்லுகள் மற்றும் ஒருங்கிணைந்த மென்பொருளுக்கான ஒரு சிறந்த  சப்ளையராக இந்த நிறுவனமானது தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. Amazon, Google, Meta, Microsoft மற்றும் Tesla போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்கள் AI மாதிரிகள் மற்றும் சேவைகளுக்கு சக்தி அளிக்க இந்த நிறுவனத்தின் வன்பொருளை நம்பியுள்ளனர். மேலும் ஆட்டோமேட்டிவ் மற்றும் மொபைல் கம்யூட்டிங் சார்ந்த சிப் உருவாக்கும் பணியையும் இந்த நிறுவனமானது மேற்கொண்டு வருகிறது.

Nvidia-வின் எதிர்கால திட்டங்கள் :

இந்த நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் பிளாக்வெல் அல்ட்ரா எனப்படும் அதன் பிளாக்வெல் சிப்பின் உயர்-பவர் பதிப்பை வெளியிடும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் புதிய AI சிப் இயங்குதளமான ரூபின் மற்றும் 2027 இல் ரூபினின் அல்ட்ரா பதிப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. அமெரிக்க சந்தையில் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் மைக்ரோசாப்ட் முதலிடத்தில் உள்ளது. 

இந்த நிறுவனம் Apple-ளை விஞ்சி அமெரிக்க சந்தையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக உள்ளது. Alphabet மற்றும் Amazon ஆகிய நிறுவனங்கள் நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன. உலக சந்தையில் Apple போன்களின் விற்பனை மந்தமாகி உள்ளது, சீனா நாடு மற்றும்  நிலவில் போட்டி போன்ற காரணங்கள் Apple நிறுவனத்துக்கு பின்னடைவாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply