OCT GST Collections FY24 இல் அதிகபட்சமாக ரூ.1.72 லட்சம் கோடி நிச்சயமாக மகிழ்ச்சிக்குரியது

OCT GST Collections :

OCT GST Collections ஆனது அதிகபட்சமாக ரூ.1.72 லட்சம் கோடியாக  உயர்ந்துள்ளது. இது எப்போதும் இல்லாத அளவு இரண்டாவது அதிகபட்ச உயர்வு ஆகும். மொத்த ஜிஎஸ்டி வருவாய்: ரூ 1,72,003 கோடி.

  • மத்திய ஜிஎஸ்டி – ரூ.30,062 கோடி.
  • மாநில ஜிஎஸ்டி – ரூ.38,171 கோடி.
  • ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி – ரூ.91,315 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.42,127 கோடி உட்பட. செஸ்: ரூ.12,456 கோடி, பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.1,294 கோடி உட்பட).

இந்த அக்டோபர் மாத OCT GST Collections கடந்த 2022-ஆம் ஆண்டு GST Collections விட 13% அதிகம் ஆகும். முதல் 6 மாதங்களுக்கு FY24 இல் சராசரி மாத மொத்த GST Collections ஆனது ரூ. 1.63 லட்சம் கோடியாகும். இந்த GST Collections- முந்தைய ஆண்டை விட 11.3% அதிகம். ஏப்ரல் 2023 இல் ஈட்டிய நிகர ரூ.1.87 லட்சம் கோடிக்குப் பிறகு இது இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர வசூலாகும்.

அக்டோபர் மாதம் OCT GST Collections சேகரிப்பு ஆனது செப்டம்பர் மாதத்தில் நுகரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுடன் தொடர்புடையது ஆகும். மகாராஷ்டிராவும், கர்நாடகாவும், நுகர்வுத் தளத்தின் அளவு மற்றும் தொழில்களின் பரவல் காரணமாக முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. SGST தீர்வுக்குப் பிறகு மகாராஷ்டிரா ஆனது ரூ.84,712 கோடி வசூல் செய்துள்ளது. மகாராஷ்டிரா ஆண்டுதோறும் 14% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

GST தீர்விற்குப் பிறகு கர்நாடகா ரூ.42,657 கோடியை வசூலித்துள்ளது. கர்நாடகா ஆண்டுதோறும் 12% வளர்ச்சியடைந்துள்ளது. தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது மாதமாக குஜராத்தை பின்னுக்குத் தள்ளி, வலுவான நுகர்வு வேகத்தைக் காட்டி மூன்றாவது அதிக வசூலைப் பதிவு செய்துள்ளது. செப்டம்பர் வசூலில் தமிழ்நாடு ரூ 37,476 கோடி (ஆண்டு அதிகரிப்பில் 9%) பதிவு செய்துள்ளது. அதே சமயம் குஜராத் ரூ.36,322 கோடி (10% ஆண்டு வளர்ச்சி) பதிவு செய்துள்ளது.

செப்டம்பர் மாதத்திற்கான GST Collections (சரக்கு மற்றும் சேவை வரி) பண்டிகை கால நுகர்வு காரணமாக  உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் வசூலிக்கப்பட்ட செப்டம்பர் மாதத்திற்கான மொத்த GST  ரூ.1,72,003 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டை விட 13% உயர்வாகும். இது நடப்பு நிதியாண்டின் அதிகபட்ச மொத்த மாத வருவாயாகும் என்று புதன்கிழமை நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும்,  இந்த செப்டம்பர் முதல் டிசம்பர் வரையுள்ள கலகட்டமானது மக்கள் ரியல் எஸ்டேட், வாகனங்கள், தங்கம் மற்றும் பயணம் போன்றவற்றில் கணிசமாக செலவழிக்கும் ஒரு பண்டிகை காலமாகும்.

நிச்சயமாக இது மகிழ்ச்சிக்குரியது மற்றும் நடந்துகொண்டிருக்கும் பண்டிகைகளின் உந்துதல் ஆனது இந்த நுகர்வு தொடர உதவும். EY இன் Tax Partner Saurabh Agarwal, “Data Analytics, Artificial Intelligence மற்றும் Stricter Norms ஆகியவை  இந்தியா முழுவதும் GST அதிகாரிகளின் இயக்கங்களுடன் இணைந்து அதிகரித்த வசூலுக்கு பங்களித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Deloitte India-வின் வரிப் பங்காளியான MS Mani, “கடந்த சில மாதங்களில் GST Collections வளர்ச்சிக்கு, Short Payments மற்றும் Short Payment Evasion ஏய்ப்பைத் தீர்மானிப்பதற்கான கருவிகளை பயன்படுத்துவதில் வரி அதிகாரிகளின் முயற்சிகள் ஆனது காரணமாக இருக்கலாம்” என்று கூறியுள்ளார். “இந்த நிதியாண்டில் GST Collections முந்தைய ஆண்டில் தவறவிட்ட GST வட்டியுடன் சேர்த்து பெறப்படும். வசூலில் ஏற்றம் காண்போம்” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply