ODI World Cup 2023: கே.எல் ராகுல் விளையாடுவாரா? சிக்கலில் இருக்கும் குட்டி கோலி...

கே எல் ராகுல் :

ODI World Cup 2023 விளையாடும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி நடக்க உள்ள பிட்னஸ் சோதனையில் கலந்து கொள்ள உள்ளார்.

உலகக்கோப்பை தொடர் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்திற்கான வீரர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. ஏற்கனவே ஐயர் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் அவர் காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக இந்த இடத்தில் சூரிய குமார் யாதவ் விளையாடி வந்தார். ஆனால் ஒரு நாள் தொடரில் அவரது பேட்டிங் சிறப்பாக இல்லை. இதனால் இந்த இடத்தில் யார் விளையாட போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. ஐயர் அவரும் பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

இருவருமே அறுவை சிகிச்சை செய்த பிறகு பல மாதங்களுக்கு பின் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கே.எல்.ராகுல் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்டபோது இவர்கள் இருவருமே விளையாடுவாரா? மாட்டாரா? என்பது ஆசிய கோப்பையிலேயே தெரிந்துவிடும் என்று கூறி இருந்தார். இதன் காரணமாக திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் இந்த நான்காவது இடத்திற்கான போட்டியில் இருந்து வருகின்றனர்.

சூரியகுமார் யாதவ் நம்பர் 4 இடத்தில் சொதப்பி கொண்டிருப்பதால் அவரை பினிஷர் ஆகவும் களம் இறக்கப்பட்டு சோதிக்க உள்ளனர். இந்த நிலையில் ராகுல் பிட்னஸ் குறித்து இன்னும் தகவல்கள்  வெளியாகவில்லை.

ODI World Cup 2023 :

இதே போன்று இந்த வார இறுதியில் ஆசியக் கோப்பையில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கு முன் இந்த மாதம் 18ம் தேதி பிட்னஸ் சோதனைக்காக என்சிஏவுக்கு செல்ல உள்ளார். ஒருவேளை அவர் பிட்னஸ் சோதனையில் தேர்வாகவில்லை என்றால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்ய வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply