Odisha Train Accident: ஒடிசாவில் ரயில் விபத்து 207 பேர் பலி, 900 பேருக்கு மேல் படுகாயம்

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த பயங்கரமான விபத்தில் 207 பேர் உயிரிழந்தனர். மேலும் 900 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் இன்று மாநில அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

தடம்புரண்ட ரயில்

பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பால்சோர் மாவட்டத்தில் பாஹாநாகா பஜார் ரெயில் நிலையம் அருகே நேற்றிரவு 7 மணி அளவில் ஹவுரா ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது எக்ஸ்பிரஸ் ரயிலின் பொட்டிகள் திடீரென தடம் புரண்டு எதிரில் இருந்த தண்டவாளம் மேல் விழுந்தது.

அந்த விபத்து நடந்த கொஞ்ச நேரத்திலேயே, அதாவது சரியாக இரவு 7:20 மணிக்கு அந்த வழியாக கொல்கத்தா ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வேகமாக வந்து தண்டவாளத்தில் இருந்த ஹவுரா ரயில் பெட்டிகளின் மீது மோதியது. இந்த பயங்கரமான விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் ஒவ்வொன்றாக தரம் புரண்டது. இதில் உள்ள சில பெட்டிகள் அருகில் உள்ள 3 வது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் சரக்கு ரயிலும் தரம் புரண்டது. இரவு நேரம் என்பதாலும், வனப்பகுதி என்பதாலும் மீட்பு பணிகள் வருவதற்கு சிறிது தாமதமாகிவிட்டது. விபத்து பற்றி தகவல் அறிந்த தென்கிழக்கு ரயில்வே மீட்பு இடத்திற்கு விரைந்து சென்றனர்.

Odisha Train Accident 207 பேர் பலி

மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதலில் காயம் அடைந்தவர்களை மீட்கப்பட்டு அருகில் உள்ள பாலசோர் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டதால் இது கோரா விபத்தாக மாறிவிட்டது. இதுவரை 207 பேர் பலியானதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது. மேலும் 900 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகமாக ஏசி பெட்டிகளில் பயணித்தவர்களுக்கே அதிகமான காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மீட்பு பணிகள் இன்னும் முடியவில்லை. மீட்பு தொடரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று ஒடிசாவின் தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வரும் மம்தா பானர்ஜி

இந்நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி வர உள்ளார். இதுகுறித்து அந்த மாநிலத்தில் பெண் ஒருவர் சொல்லும்போது நாங்கள் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்துள்ளோம். எங்கள் முதல்வர் மம்தா பானர்ஜி இங்கு வருகிறார். அவர் காரக்பூரிலிருந்து மருத்துவர்களையும், அதிகாரிகளையும் மற்றும் மீட்பு பணியாளர்களையும் அனுப்பி வைத்துள்ளார். என்று தெரிவித்துள்ளார்.

இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஒடிசாவில் ரயில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று (ஜூன்3) ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும், தேவையானாள் மருத்துவ குழுக்களையும் அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துக்கொண்டார்.

Latest Slideshows

Leave a Reply