Olympic Academy : சென்னை வேப்பேரியில் ஒலிம்பிக் அகாடமி

17.47 கோடி ரூபாய் செலவில் Olympic Academy :

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் வளாகத்தில் ரூ.17.47 கோடி செலவில் தமிழக அரசு Olympic Academy கட்டிடம் கட்டி உள்ளது. முதன்முறையாக தமிழகம், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு ஆனது ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களை உருவாக்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில் ஒரு சிறந்த ஒலிம்பிக் அகாடமியை சென்னையில் உருவாக்கி உள்ளது. தமிழகத்தை விளையாட்டு போட்டிகளின் தலைமையகமாக மாற்ற சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 4 ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் ஆனது  நிறுவப்படும். இந்த ஒலிம்பிக் அகாடமியை சென்னை நேரு விளையாட்டரங்கில் 19/02/2024 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயதிநி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த Olympic Academy ஆனது மூன்றடுக்கு கொண்டுள்ளது. இந்த ஒலிம்பிக் அகாடமியின்,

  • தரைதளத்தில் பன்நோக்கு விளையாட்டுத் தளம் உள்ளது.
  • முதல் தளத்தில் டேக் வாண்டோ மற்றும் ஜூடோ விளையாட்டுத் தளம் உள்ளது.
  • இரண்டாவது தளத்தில் வாள்வீச்சு தளம் உள்ளது.
  • மூன்றாவது தளத்தில் விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயதிநி ஸ்டாலின் தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்,

  • மறுசீரமைக்கப்பட்ட, மேம்படுத்தப்பட்ட sdat. tn.gov.in என்ற இணையதளம்
  • இணையதள சேவைகளான விளையாட்டரங்க பதிவு, உறுப்பினர் பதிவு, உயரிய ஊக்கத் தொகை இணையவழி விண்ணப்பம்
  • விளையாட்டுப் போட்டிகளில் (முதல்வர் கோப்பை) வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக பெறுதல் சேவைகளையும் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை :

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகம் முதன்முறையாக கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது. இந்த கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் விரைவில் கவுரவிக்கப்படுவார்கள். தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.440 கோடி ஆனது ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.440 கோடி நிதி போதாவிட்டால் முதல்வரிடம் கூடுதலாக நிதி கேட்டுப் பெறுவோம். பார்முலா கார் பந்தயம் நடத்துவதற்கான பணிகள் ஆனது மேற்கொள்ளப்படும். இந்த பார்முலா கார் பந்தய போட்டியை நடத்துவதற்கு கூடுதல் ஸ்பான்சர்களை தேடுவோம்” என்றார். இளைஞர்களின் ஆர்வத்தை கடல்சார் நீர் விளையாட்டுகளில் ஈர்க்கவும் மற்றும் நீர் விளையாட்டு போட்டிகளுக்கான உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பை ஏற்படுத்தவும் நாட்டிலேயே முதல்முறையாக ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில் தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி ஆனது அமைக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாதரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Latest Slideshows

Leave a Reply