Olympics 2024 Closing Ceremony : பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் 2024 நிறைவு விழா

Olympics 2024 Closing Ceremony In Paris :

பாரிஸில் July 25, 2024-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் 2024 ஒலிம்பிக் தொடரானது Aug 11, 2024ம் தேதி நிறைவு பெற உள்ளது. இந்தியாவிலிருந்து 117 பேர் கொண்ட குழு பாரிஸ் சென்று விளையாடி வருகிறது. மொத்தம் 69 பதக்கங்கள் கொண்ட ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை 1 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 6 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

இன்று பாரிஸில் நடைபெற உள்ள இந்த நிறைவு விழாவில் (Olympics 2024 Closing Ceremony) இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கி சுடுதல் வீரரான மனு பாக்கர், இந்தியாவின் கொடியை ஏந்த தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிக்கை தெரிவித்துள்ளது. தற்போது மனு பாக்கருடன் இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் இணைந்து கொடியை ஏந்திச் செல்வார் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் இந்திய ஹாக்கி அணி அடுத்தடுத்த 2 ஒலிம்பிக்கில் வெண்கலம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தற்காகவும் மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணிக்காக பங்காற்றியதை பெருமை படுத்துவதற்காகவும் இந்திய கொடியை ஏந்திச்செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பதக்கப்பட்டியல் விவரங்கள் :

  • துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கலங்கள் பெற்றுள்ளார். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் தடகள வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார்.
  • துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசலே ஒரு வெண்கலம் பெற்றுள்ளார்.
  • இந்திய ஹாக்கி அணி ஒரு வெண்கலம் பெற்றுள்ளது.
  • ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.
  • இந்தியாவின் அமன் செஹ்ராவத் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதுவரை மொத்தம் 6 பதக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று ஹரியானாவைச் சேர்ந்த 22 வயதான துப்பாக்கி சுடும் வீரர் வரலாறு படைத்துள்ளார். துப்பாக்கி சுடுதல் பிரிவில், துப்பாக்கி சுடும் வீரர் ஸ்வப்னில் குஷாலே 50 மீட்டர் ரைபிள் த்ரீ பொசிஷன்ஸ் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். 

Latest Slideshows

Leave a Reply