OnePlus 11R 5G Solar Red Edition : OnePlus 11R சோலார் ரெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகமாகியது

  • OnePlus நிறுவனம் நேற்று தனது புதிய ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷனை (OnePlus 11R 5G Solar Red Edition) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது சிவப்பு நிறத்தில் அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
  • 18GB RAM, மேம்படுத்தப்பட்ட செயல்திறன், ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் OnePlus 11R சோலார் ரெட் எடிஷன் வெளிவந்துள்ளது. ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

1. OnePlus 11R 5G Solar Red Edition Display :

  • அதாவது 6.74 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. இந்த அசத்தலான OnePlus 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன். மேலும் 2772×1240 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. இந்த போனின் டிஸ்பிளேவானது குறிப்பாக பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

2. OnePlus 11R 5G Solar Red Edition Storage :

  • OnePlus 11R 5G சோலார் ரெட் எடிஷன் போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8+ஜென் 1 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. அதேபோல் இந்த போனில் 18GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த போனில் அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு கூடுதலாக வருகிறது.

3. OnePlus 11R 5G Solar Red Edition Software :

  • அதேபோல் Oxygen OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
  • ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் மென்பொருள் மற்றும் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் செலுத்தியுள்ளது OnePlus நிறுவனம்.

4. OnePlus 11R 5G Solar Red Edition Camera :

50MB பிரைமரி கேமரா + 8MB அல்ட்ரா வைடு லென்ஸ் + 2MB மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் Camera அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷன் போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும் மற்றும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16MB கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த OnePlus 11R 5G Solar Red Edition போன்.

5. OnePlus 11R 5G Solar Red Edition Battery :

LED பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷன் போன். 100 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000 mAh பேட்டரியுடன் இந்த புத்தம் புதிய ஒன்பிளஸ் போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கும் சாரஜ் பற்றிய கவலை இருக்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் இந்த OnePlus 11R 5G Solar Red Edition ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

6. OnePlus 11R 5G Solar Red Edition Rate :

OnePlus 11ஆர் 5ஜி சோலார் ரெட் எடிஷனின் விலை ரூ.45,999/- ஆக உள்ளது. மேலும் ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், அமேசான் போன்ற சில தளங்களில் மட்டும் இந்த போனை வாங்க முடியும். அதேபோல் வரும் அக்டோபர் 7-ம் தேதி Early Access-ன் ஒரு பகுதியாக இந்த Solar Red Edition போனை வாங்கும் பயனர்கள் ரூ.1000 தள்ளுபடியைப் பெறமுடியும். மேலும் இதனுடன் ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2-வை இலவசமாகப் பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply