OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus 13 & 13R ஸ்மார்ட்போன்களுக்கு 180 நாட்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டத்தை (OnePlus 13 & 13R Phone Replacement) வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. OnePlus 13 சீரிஸ் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் பல புதிய அப்டேட்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 6000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 15, ஆக்சிஜன் ஐஓஎஸ் 15 உள்ளிட்ட பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
180 நாட்கள் திட்டம் (OnePlus 13 & 13R Phone Replacement)
OnePlus 13 & 13R ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு 180 நாள் மாற்றுத் திட்டம் வழங்கப்படும். இதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை. பிப்ரவரி 14-ம் தேதி போனை வாங்குபவர்கள் OnePlus 13-க்கு ரூ.2599 மற்றும் OnePlus 13R மாடலுக்கு ரூ.2299 கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதலாக மூன்று மாதங்களுக்கு சேவை (OnePlus 13 & 13R Phone Replacement) கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்பொருள் தரத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தால் இந்த திட்டத்தைப் பயன்படுத்தலாம். ஸ்கிரீன், பேக் கவர், பேட்டரி, மதர்போர்டு போன்றவற்றில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், ஒரு முறை சாதனத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
OnePlus 13 மற்றும் OnePlus 13R ஸ்மார்ட்போன் Curved டிஸ்பிளே வசதியுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இரண்டும் வட்ட வடிவ கேமரா வடிவமைப்பைக் கொண்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்கள் வீகன் லெதர், க்ளாஸ் என இரண்டு வகையான போன் கேஸ் உடன் கிடைக்கும் (OnePlus 13 & 13R Phone Replacement) என்று கூறப்படுகிறது. OnePlus 13 தொடர் ஸ்மார்ட்போன்கள் 6000 mAh பேட்டரி, அதிவேக சார்ஜிங் மற்றும் புதிய சிப்செட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இரண்டும் 3-4 ஆண்டுகள் மென்பொருள் புதுப்பிப்புகளைப் பெறும் என்று கூறப்படுகிறது. OnePlus 13 ஆனது 50 MP Sony LYT முதன்மை கேமரா, 50 MP டெலிஃபோட்டோ லென்ஸ் கேமரா மற்றும் 50 MP அல்ட்ராவைட் சென்சார் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. OnePlus 13R மூன்று கேமரா அமைப்புடன் இருக்கிறது. இது 50 MP பிரைமரி கேமரா, டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8 MP அல்ட்ராவைட் லென்ஸுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை விவரம்
OnePlus 13 மாடலின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.69999-க்கும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி (OnePlus 13 & 13R Phone Replacement) மாடலின் விலை ரூ.76999 மற்றும் 24 GB ரேம் + 1TB மெமரி மாடலின் விலை ரூ.89999-க்கும் விற்பனையாகிறது. OnePlus 13R மாடல் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.42999 மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.49999-க்கும் விற்பனையாகிறது.
Latest Slideshows
-
Yoga Benefits : யோகா செய்வதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!
-
International Film Festival 2025 : 23-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச 11-ல் தொடக்கம்..!
-
Madras High Court Recruitment : சென்னை உயர் நீதிமன்றத்தில் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?