நேற்று நடைபெற்ற OnePlus Summer Launch Event-ல் ஒன்பிளஸ் நோர்ட் 4 5G ஸ்மார்ட்போன் அறிமுகமானது

நேற்று (ஜூலை 16) மாலை நடந்த ஒன்பிளஸ் சம்மர் லான்ச் (OnePlus Summer Launch Event) நிகழ்வின் போது ஒரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன், ஒரு டேப்லெட், ஒரு இயர்பட்ஸ் மற்றும் ஒரு ஸ்மார்ட் வாட்ச் என மொத்தம் 4 புதிய ஒன்பிளஸ் தயாரிப்புகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. 

OnePlus Summer Launch Event :

இத்தாலியில் நடைபெற்ற ஒன்பிளஸின் இந்த வெளியீட்டு நிகழ்வானது இந்திய நேரப்படி நேற்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. வெறும் 50 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற  இந்நிகழ்வானது ஒன்பிளஸ் நிறுவனத்தின் யூட்யூப் சேனல் வழியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக ஊடக தளங்களின் வழியாகவும் நேரலையில் ஒளிபரப்பட்டது. ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டு நடத்திய  இரண்டாவது ஈவென்ட் இதுவாகும்.

4 புதிய ஒன்பிளஸ் தயாரிப்புகள் அறிமுகம் :

இந்த ஒன்பிளஸ் சம்மர் லான்ச் நிகழ்வின் போது OnePlus Nord 4 5G ஸ்மார்ட்போன் மற்றும் ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) டேப்லெட் மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 ப்ரோ (OnePlus Nord Buds 3 Pro) இயர்பட்ஸ் மற்றும் ஒன்பிளஸ் 2ஆர் ஸ்மார்ட் வாட்ச் (OnePlus Watch 2R) ஆகிய 4 புதிய ஒன்பிளஸ் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.

OnePlus Nord 4 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சம் :

  • இந்த OnePlus Nord 4 5G ஸ்மார்ட்போன் என்ன விலையில் விற்பனைக்கு வரும் என்பதுதான்  இந்த OnePlus Summer Launch Event-ல் முக்கிய அம்சமாக இருந்தது.
  • ஒன்பிளஸ் நிறுவனத்தின் OnePlus Nord 4 5G போன் AI ஏரேசர் மற்றும் ஸ்மார்ட் கட்அவுட் போன்ற பல AI அம்சங்களுடன் அனுப்பப்படும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த OnePlus Nord 4 5G ஸ்மார்ட்போன் 4 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 6 வருடம் செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும் என்பதையும் ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. அதாவது 6 வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன் வரும் முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

OnePlus Nord 4 5G Rate :

இந்த OnePlus Nord 4 5G ஸ்மார்ட்போன் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ஆஃபர் விலை ரூ.29,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட விலை வங்கி தள்ளுபடிகளுக்கு பிறகு கிடைக்கும் விலையாகும்.

Latest Slideshows

Leave a Reply